தைவானை சேர்ந்தவர் ஹூவாங். இவர் கிளி ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். சம்பவத்தன்று ஹூவாங் கிளியுடன் தனது வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காவுக்கு சென்றார்.

அப்போது அங்கு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் லின் என்பவர் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஹூவாங்கின் கிளி திடீரென பறந்து சென்று, டாக்டர் லினின் முதுகில் கால்களை வைத்து நின்று இறக்கையை பலமுறை அசைத்தது. இதில் டாக்டர் லின் திடுக்கிட்டு கீழே விழுந்தார். இதில் அவரது இடுப்பு எலும்பு முறிந்தது.

அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் சிகிச்சை பெற்றார். எனினும் அவர் முழுமையாக குணம் அடைய 3 மாதங்கள் ஆனது. அதுமட்டும் இன்றி இந்த சம்பவத்தால் டாக்டர் லின்னால் தொடர்ந்து 6 மாதங்கள் வேலை செய்ய முடியாத நிலை

இதனால் வருமான ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட டாக்டர் லின் உரிய நிவாரணம் கேட்டு கிளியின் உரிமையாளர் ஹூவாங் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு கிளியின் உரிமையாளரான ஹூவாங்குக்கு 2 மாத சிறை தண்டனையும், 91,350 டாலர் (சுமார் ரூ.74 லட்சம்) அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *