(நூரளை பி. எஸ். மணியம்)
200 வருடங்கள் வரலாற்றை கொண்ட பெருந்தோட்ட மக்களின்  வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உருவாக்க அனைத்து தரப்பினரும் உணர்வு பூர்வமாக செயல் பட முன்வரவேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கும் இலங்கையை கட்டியெழுபி வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையக மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். என்பதில் மிகவும் அக்கறையுடன் செயல்படுகின்றார். இதற்க்கு மலையகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது வரட்டு கௌரவத்தை ஓரங்கட்டிவிட்டு இதற்க்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.அப்பொழுதுதான் மலையகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட தமிழ் பிரதிநிதி குழு தலைவரும் நுவரெலியா தொகுதி அமைப்பாளரும் தொழிலதிபருமான கலாநிதி சதானந்தன் திருமுருகன் தெரிவித்துள்ளார்.
அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டில் வாழும் வடகிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முழு முயற்சியுடன் அக்கரை செலுத்தி வருகின்றார்.
மலையக மக்கள் இலங்கையில் குடியேறி 200 வருடங்கள் கடந்தும் இன்றும் பெருந்தோட்ட பகுதியில் சுயமாரியாதையுடன் வாழமுடியாமல் தோட்ட நிர்வாகங்களுக்கு கொத்தடிமைகளாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் வாக்களிப்பதற்கு மாத்திரம் தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்கின்றார்கள். ஏனைய விடயங்களில் ஒதுக்கி வைத்திருகின்றார்கள்.
இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களுக்கு அரசாங்கத்திட மிருந்து கிடைக்கும் உரிமைகள், சலுகைகள் ,உதவிகள் இம் மக்களுக்கு கிடைப்பதில்லை. ஆனால் நாட்டின் வருமானத்திற்காக கடந்த 200 வருடங்களாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்கள்.
பெருந்தோட்ட மக்கள் தோட்டங்களில் குடியேறி 200 வருடங்கள் கடந்தும் வீட்டுரிமை காணிவுரிமை இல்லாமலும் பாதை, குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து வசதிகள் மற்றும் உழைப்பிற்க்கு ஏற்ற ஊதியம் இல்லாமல் அடிமைகளாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் பிச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும். என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சி எடுக்கும் இவ்வேளையில் மலையக அரசியல்வாதிகளும் வரட்டு கௌரவத்தை ஒதுக்கி வைத்து விட்டு ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கி மலையக மக்களின் பிரச்சனை களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முன் வரவேண்டும்.  என திருமுருகன் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *