கடந்த 7 ஆம் திகதி ஆரம்பிக்கபப்ட்ட ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான போர் இன்னும் முடிவுக்குவராத நிலையில் உலகநாடுகள் மூன்றாம் உலகப்போர் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலிற்குள் மேற்கொண்ட தாக்குதலின் போது பணயக்கைதியாக பிடிபட்ட இரு அமெரிக்கர்களான, தாயையும் மகளையும் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.

இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள கிபுட்ஸ் நகல் ஒஸ்ஸில் ஹமாஸ் அமைப்பு மேற்கொண்ட தாக்குதலின் போது பிடிபட்ட ஜூடித் நட்டாலியா ரானன் இருவரையும் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.

200க்கும் அதிகமானபணயக்கைதிகள்

ஹமாஸ் அமைப்பு தன்னிடம் உள்ள 200க்கும் அதிகமானபணயக்கைதிகளில் இருவரை விடுதலை செய்துள்ளது. கட்டார் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

யூடித் ரனானும் அவரது 17 வயது மகள் நட்டாலியாவும் தென் இஸ்ரேலில் உள்ள தங்கள் உறவினர்களை சந்திக்கசென்றிருந்தவேளை 7ம் திகதி ஹமாஸ் தாக்குதலை மேற்கொண்டது.

இந்நிலையில் ஹமாஸால் விடுதலைசெய்யப்பட்ட பணயக்கைதிகள் இருவரையும் காசாவிலிருந்து இஸ்ரேலிற்குள் கொண்டுவருவதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உதவியுள்ளது.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *