மலையகத் தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு அமெரிக்காவின் பங்களிப்பும் அவசியம் – அமெரிக்க தூதுவரிடம் அமைச்சர் ஜீவன் கோரிக்கை

Share

Share

Share

Share

மலையகத் தமிழர்களின்  பொருளாதார மேம்பாட்டுக்கு அமெரிக்காவின் பங்களிப்பும் அவசியம். அதற்காக உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

நுவரெலியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்  (Julie Chung) அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் நேற்று (07.02.2023) பேச்சு நடத்தினார்.

நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு மலையக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்த ஜீவன் தொண்டமான்,  மலையக மக்களின் தற்போதைய நிலைவரம் பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன், மலையக மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வழிமுறைகள் மற்றும் அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

க.கிஷாந்தன்

ஊடக செயலாளர்

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து...
இலங்கை அணிக்கு 20% அபராதம்
“அனைவரும் சீனர்கள்”
ஐ.நா சனத்தொகை நிதியம் பாராட்டு
காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை