ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக கடமையாற்றிய காலத்தில் 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாது, தற்பொழுது நடைமுறைப்படுத்த எத்தனிப்பது குறித்து ஆழமாக ஆய்வு செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக வழங்குவது தொடர்பில் ஆழமாக ஆய்வு
13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக வழங்குவது தொடர்பில் ஆழமாக ஆய்வு செய்யப்பட வேண்டுமென ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜே.ஆர். ஜயவர்தன முதல் கோட்டாபய ராஜபக்ச வரையிலான ஜனாதிபதிகள் 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாமைக்கு ஏதுவான காரணிகள் தொடர்ந்தும் சமூகத்தில் காணப்படுகின்றனவா என்பதனை ஆழமாக கவனிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையிலேயே 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஆழமாக ஆராயாமல் இந்த 13ம் திரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *