டிக்கோயா ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்

Share

Share

Share

Share

 

பல கோரிக்கைகளை முன்வைத்து, டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் கனிஷ்ட பணியாளர்கள் இன்று (19) மதிய உணவு நேரத்தில் வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் கடுமையாக மருந்து தட்டுப்பாடு, மனித வள குறைவு, வரிச்சுமை அதிகரிப்பு போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் நிலவும் மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலையின் பல பிரிவுகள் மூடப்பட்டுள்ளதாகவும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை தனியார் மருந்தகங்களில் வாங்கி, மருந்து சீட்டு கொடுத்தாலும், நோயாளிகள் அதிக பணம் செலவழித்து அந்த மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட வைத்தியர்கள் தெரிவித்தனர்.

வைத்தியர்கள், செவிலியர்களின் சம்பளத்தில் வரிப்பணம் வசூலிக்கப்படுவதால் இவர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையால் வைத்தியர்கள், செவிலியர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்வதால் வைத்தியசாலைகளை எதிர்காலத்தில் மூட வேண்டிய நிலை ஏற்படும்.

நாட்டை ஆளும் அரசியல்வாதிகளுக்கு வயது வரம்பு விதிக்கப்படாமையால் நாடு மேலும் பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிளை தலைவர் ரொஷான் சிறிவர்தன தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)

 

Displaying Photo (4).jpg.

விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்