உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நவீன டாங்கிகள் வழங்கும் மேற்கத்திய நாடுகளின் முடிவானது, அவர்கள் இந்த போரில் நேரடியாக பங்கேற்பதாகவே அர்த்தம் என ரஷியா எச்சரித்துள்ளது.
இந்நிலையில், நவீன டாங்கிகள் அனுப்பப்படும் என அமெரிக்கா மற்றும் ஜெர்மனி அறிவித்த 24 மணி நேரத்துக்குள் உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் 11 பேர் பலியாகினர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.