இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புளோம்பாண்டீன் நகரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 342 ரன்கள் குவித்தது. ஹாரி புரூக் 80 ரன்னும், கேப்டன் ஜோஸ் பட்லர் 94 ரன்னும் மொயீன் அலி 51 ரன்னும் விளாசினர். 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. கேப்டன் பவுமா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 109 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டேவிட் மில்லர் 58 ரன்னும், மார்கோ ஜேன்சன் 32 ரன்னும் எடுத்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில், தென் ஆப்பிரிக்கா 49.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 347 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது பவுமாக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என கைப்பற்றியது. இவ்விரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 1-ம் தேதி நடக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *