இந்தூரில் நடைபெறும் நடப்பு சாம்பியன் மத்தியபிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆந்திரா முதல் நாளில் 2 விக்கெட்டுக்கு 262 ரன்கள் எடுத்து இருந்தது. ரிக்கி புய் 115 ரன்னுடனும், கரண் ஷிண்டே 83 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய கரண் ஷிண்டே 110 ரன்னிலும், ரிக்கி புய் 149 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். அதன் பிறகு வந்தவர்கள் தாக்குப்பிடிக்கவில்லை.

இதனையடுத்து ஆந்திர அணி முதல் இன்னிங்சில் 379 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய மத்தியபிரதேச அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *