2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி பாகிஸ்தானில் நடைபெறும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் பாகிஸ்தானில் நடத்தாமல் இருப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக திட்டமிட்டபடி, 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெறும் என்றும், இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் பாகிஸ்தானுக்கு வெளியே நடைபெறும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் அரசியல் விரிசல் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லாததால் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் பாகிஸ்தானுக்கு வெளியே நடத்தப்பட்டு வருகிறது.
அந்த போட்டிகள் UAE, ஓமன், இலங்கை அல்லது இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஒரு நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
2023 ஆசிய கிண்ணம் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.