சந்திக ஹத்துருசிங்க

பங்களாதேஷ் அணியின் ODI மற்றும் டெஸ்ட் அணியின் பிரதான பயிற்சியாளராக இலங்கையணியின் முன்னாள் வீரர் சந்திக ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹத்துருசிங்க 2014 தொடக்கம் 2017 வரை இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளராக கடமையாற்றினார். பின்னர் ஹத்துருசிங்க அவுஸ்திரேலிய பிராந்திய அணியான நிவ் சவுத்வேல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக கடமையாற்றினார். பங்களாதேஷ் அணியின் பிரதம பயிற்சியாளராக கடமையாற்றிய ரசல் டொமினிகோ அண்மையில் பதவி விலகியமை குறிப்பிடதக்கது.

அரசாங்கத்தின் வருமானம்

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மாதாந்த செலவினத்தை விட அரசாங்கத்தின் வருமானம் தற்போது மிகவும் குறைவாக இருப்பதால் அரச செலவினங்களை மேலும் குறைக்க வேண்டும் என்று நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக் குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நலன்புரி, மருந்துகள் மற்றும் கடன் கொடுப்பனவுகள் தவிர்ந்த, ஏனைய அனைத்துச் செலவுகளையும் தற்போது திறைசேரிக்கு ஏற்பது கடினம் எனவும் ஜனாதிபதி மேலும் […]

படப்பிடிப்புக்காக டெல்லி வழியாக செல்ல நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ந் தேதி ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இதன் படப்பிடிப்பு 60 சதவீத அளவிற்கு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 7ந் தேதி ஐதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் விமானம் மூலம் 15ந் தேதி […]

அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா நீண்ட நாட்களுக்கு பின்னர் அணியில்

இந்திய அணியை பொறுத்தவரையில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் டி20 போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதேவேளையில் மற்றொரு அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா நீண்ட நாட்களுக்கு பின்னர் அணியில் இடம் பிடித்துள்ளார். நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமிடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் […]

நேற்று நடந்த போட்டியில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்

இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் மகளிர் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் கேப்டன் ஹேலி மேத்யூஸ் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் தீப்தி […]

சீனாவில் அதிகரித்து வருகிற பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம்

சீனாவில் சமீப ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும் அங்கு பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. எனவே நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அங்கு பல ஆண்டுகளாக அமலில் இருந்த ஒரே குழந்தை கொள்கையை கடந்த 2016-ம் ஆண்டு அரசு தளர்த்தியது. மேலும், கடந்த ஆண்டு முதல் தம்பதிகள் 3 குழந்தைகளைப் பெறவும் அந்த நாடு அனுமதி […]

நட்பு நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை

நேட்டோவில் இணையும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை பெயரிலான இந்த படையெடுப்பு 11 மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் ஆயுத, நிதி உதவிகள் சார்ந்த ஆதரவு கிடைத்து வருகிறது. மறுபுறம் ரஷியாவை பலவீனமடைய செய்யும் பொருளாதார தடைகள் உள்ளிட்டவையும் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த போரால், வளர்ந்து வரும் நாடுகளின் மக்கள் அதிகம் பாதிப்படைந்து […]

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி – 4 ஆண்டுகள் சிறை தண்டனை

அம்பத்தூர் அடுத்த பாடி சீனிவாசா நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவருடைய மனைவி சுலோச்சனா . கலைச்செல்வன் ஆவடி அடுத்த பொத்தூர் கிராமத்தில் உள்ள பொதிகை நகரில் 1,500 சதுர அடி இடத்தை சுலோச்சனா பெயரில் கிரையம் செய்து அதற்காக பட்டா மாறுதல் பெற வேண்டி பொத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமி என்பவரிடம் மனு கொடுத்தார். அதற்கு கந்தசாமி, ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுபற்றி சுலோச்சனா சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் […]

மக்களின் மகிழ்ச்சியே நமது ஆட்சியின் இலக்கு

மழையே, வெள்ளமோ ஏற்படும் முன், தண்ணீர் தேங்காத சூழலை ஏற்படுத்தும் என்று உறுதியேற்று, மிகப்பெரிய சாதனைகளை அரசு செய்துள்ளது. கடந்த மழை – இந்த மழையை ஒப்பிட்ட மக்கள் சமூக வலைதளங்களில் பாராட்டினர். மழை பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டுக்கள். மிகுந்த மகிழ்ச்சியில் பாராட்டு விழாவில் உரையாற்றுகிறேன். அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகிறது. இதில் கொரோனாவை எதிர்கொண்டு வென்றோம், மழை வெள்ளத்தில் மக்களைக் காத்தோம் என்ற இரண்டு சாதனைகளை படைத்துள்ளோம். அரசு பாராட்டு […]

உடல்நிலையை கண்டறியாமல் கொடுக்கப்படும் மருந்துகளால், பல்வேறு சிக்கல்கள்

விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம டெங்கு மற்றும் இன்புளுவென்சா நோய்த்தொற்றுக்கள் இரண்டும் அதிகரித்து வருவதால், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளார். எனவே இரத்தப் பரிசோதனையின் மூலம் இவ்விரு நோய்களையும் தனித்தனியாகக் கண்டறிந்து மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். டெங்கு மற்றும் இன்புளுவென்சா ஆகிய இரண்டின் அறிகுறிகளும் ஒரே மாதிரியான வளர்ச்சியைக் காட்டுகின்றன என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் நோயாளியின் உடல்நிலையை கண்டறியாமல் […]