10 வயதுடைய சிறுவன் காணாமல் போயுள்ளான்

இராகலை சென் லெணாட்ஸ்  தோட்டத்தில் 10 வயதுடைய சிறுவன் ஒருவர் (24) அன்று மாலை காணாமற் போயுள்ளதாக இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமற் போன சிறுவன் இராகலை கிருஸ்ணன் ஜூனியர் பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் சுரேஷ்குமார் லுக்சான் லோகிதன் (வயது 10) என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை – ஹாலி எள்ள திக்வல தோட்டத்தை சேர்ந்த இந்த மாணவனின் தாய்  வெளிநாட்டுக்கு தொழிலுக்காக சென்று நான்கு மாதங்களாகின்றன. தந்தை பதுளையில் வாகனங்கள் திருத்தும் நிலையம் […]

நாட் சம்பளமாக 3, 500 ரூபா வழங்கப்பட வேண்டும்.

உள்ளூராட்சிசபைத்  தேர்தலை திட்டமிட்டப்படி மார்ச் 9 ஆம் திகதி நடத்துமாறும், மின் கட்டணத்தை குறைக்ககோரியும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வை வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசை வலியுறுத்தி மஸ்கெலியா நகரில் இன்று (25) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பிரதான அமைப்பாளர் பெரியசாமி பிரதீபனால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மஸ்கெலியா நகரில், எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில், உள்ளாட்சிசபைத் தேர்தலில் புதிய லங்கா சுதந்திரக்கட்சி […]

தேர்தலை ஒத்திவைத்து மக்கள் சாபத்துக்கு உள்ளாகாதே

உள்ளூராட்சிசபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தலவாக்கலை நகரில் இன்று (25.02.2023) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அசோக சேபாலவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டத்தில் கட்சி செயற்பாட்டாளர்களும், மக்களும் கலந்துகொண்டனர். ” தேர்தலை ஒத்திவைத்து மக்கள் சாபத்துக்கு உள்ளாகாதே, தேர்தலை உடன் நடத்து, மனித உரிமைகளைமீறி சர்வாதிகார ஆட்சி செய்யாதே, பொருட்களின் விலையை குறை” என்பன உட்பட பல கோஷங்கள் எழுப்பட்டன. அத்துடன், தமது கோரிக்கைகளை பதாகைகளில் எழுதி அவற்றை […]

நுவரெலியாவில் இரத்ததான முகாம்

நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியின் ஏற்பாட்டில் “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. நுவரெலியா கல்வி வலயத்தின் நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியின் எற்பாட்டிலும், நுவரெலியா ரோட்ரிக் கழக அனுசரனையுடன், கல்லூரியின் அதிபர் ரவிச்சந்திரன் தலைமையில் இந்த இரத்த தான முகாம் பாடசாலை பிரதான மண்டபத்தில் நேற்று (24)  நடைபெற்றது. நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்த தான நிகழ்வில் […]

தேர்தலுக்கு ரெடி – மஹிந்த

அரசாங்கத்திற்கு தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாமையே தேர்தலை பிறந்போடுவதற்கான காரணம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகக்ஸ தெரிவித்துள்ளார். தேர்தல் ஒன்றை நடத்ததுவதால் மக்களின் எண்ணங்களை விளங்கி கொள்ள முடியும் எனவும் அவர் நேற்று கண்டியில் வைத்து ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

Blue Mountation – விளையாட்டு கழகம்

பண்டாரவளை ஊவா ஹைலண்ட்ஸ் Blue Mountation விளையாட்டு கழகம் நடத்தும் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி இன்று நடைபெறவுள்ளது. காலை 9.30க்கு ஊவா- ஹைலண்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. காலையில் மழை பெய்த போதிலும் இப்போது சீரான காலநிலைமை நிலவுவதால் திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.

நீச்சல் குளத்திற்குள் தவறி விழுந்த குழந்தை

சுமார் 3 மணி நேரம் தொடர்ந்த இந்த போராட்டத்தின் பலனாக, அதிசயிக்கத்தக்க வகையில் குழந்தையின் இதயத்துடிப்பு மீண்டுள்ளது. கனடாவில் உள்ள பெட்ரோலியா நகரத்தில், குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 20 மாத குழந்தை, அங்கிருந்த நீச்சல் குளத்திற்குள் தவறி விழுந்துள்ளது. இதனை அங்கிருந்தவர்கள் உடனடியாக கவனிக்காத நிலையில், சுமார் 5 நிமிடங்களுக்குப் பிறகே குழந்தை நீச்சல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவ்வாறு மீட்கப்பட்ட குழந்தை பேச்சு மூச்சின்றி இருந்ததைக் கண்டு பாதுகாப்பு மைய ஊழியர்கள் […]

உக்ரைனை விட்டு ரஷ்யப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்

உக்ரைனை விட்டு ரஷ்யப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உக்ரைனில் அமைதி நீடிக்க ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்றும் ஐநா.சபையின் உக்ரைன் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது. இத்தீர்மானத்துக்கு 141 உறுப்பு நாடுகள் ஆதரவாகவும் 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியாவும் சீனாவும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன. முன்னதாக நடைபெற்ற விவாதத்தில் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவைப் பிளவுபடுத்த முயற்சிப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கய் ஷோய்கு குற்றம் சாட்டினார். இந்தியாவின் சார்பில் பேசிய […]

தனது கனேடிய குரியுரிமையை துறக்க முடிவு – அக்‌ஷய்

பிரபல இந்திய நடிகரான அக்‌ஷய் குமாருடைய குடியுரிமை குறித்து அவ்வப்போது சர்ச்சை எழும். அவர் கனேடிய பாஸ்போர்ட் வைத்திருப்பது குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். இந்த விடயம் நீண்ட நாட்களாகவே சர்ச்சையை உருவாக்கிவந்த நிலையில், அது குறித்து கடந்த ஆகத்து மாதம் முதன்முறையாக மனம் திறந்தார் அக்‌ஷய். நான் இந்தியாவைச் சேர்ந்தவன், நான் ஒரு இந்தியன், எப்போதுமே இந்தியனாகத்தான் இருப்பேன் என்று கூறியிருந்தார் அக்‌ஷய். சில வருடங்களுக்கு முன், என்னுடைய 14, 15 படங்கள் தோல்வியடைந்துவிட்டன என்று […]

றொரன்டோ நகரின் மேயர் பதவி வெற்றிடத்திற்கான இடைத் தேர்தல்

றொரன்டோ நகரின் மேயர் பதவி வெற்றிடத்திற்கான இடைத் தேர்தல் தொடர்பிலான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 26ம் திகதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. றொரன்டோ நகர குமஸ்தா ஜோன் டி எல்விட்க் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். எவ்வாறெனினும், இந்த திகதி அறிவிப்பினை நகரப் பேரவை அங்கீகரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட உள்ளது. றொரன்டோ நகர மேயராக கடமையாற்றி வந்த […]