இளம் அரசியல்வாதிகள் உருவாகும் காலம்

நாட்டில் வேலை செய்யக்கூடிய அரசியல்வாதிகள் குறைந்த அளவிலேயே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஆகவே ஆற்றல் கொண்ட இளம் அரசியல்வாதிகள் உருவாகும் காலம் வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

T20 கிண்ணத்தை தனதாக்கியது அவுஸ்திரேலிய அணி

தென்னாப்பிரிக்க அணியை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகளிர் T20 உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற மகளிர் T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதையடுத்து 157 ஓட்டங்கள் எடுத்தால் […]

இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள் (photos)

கடல்சார் பொருளாதார சட்டத்தில் நிபுணத்துவத்தை பெறுமாறும் துறைமுக நகரத்தில் புதிய சட்ட அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்றை அமைக்குமாறும் இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  வேண்டுகோள் விடுத்தார். புதிய துறைமுக நகரமானது கடல்சார் பொருளாதார சட்டத்துடன் கூடிய நிதி மையமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று (25) பிற்பகல் கொழும்பு றோயல் கல்லூரி சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் […]

ஹெரோல் தோட்டத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம்…

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெரோல் தோட்டத்திலுள்ள தோட்ட குடியிருப்பு ஒன்றின் மலசலகூடத்தில் சிக்கியிருந்த சிறுத்தைக்குட்டியை பிடிக்க நல்லதண்ணி மற்றும் நுவரெலியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள்  இன்று (26) நடவடிக்கை எடுத்தனர். நான்கு மாதங்களே ஆன குறித்த சிறுத்தை குட்டி மலசலகூடத்தில் சிக்கிய போது தோட்ட தொழிலாளி ஒருவர் சிறுத்தையை பார்த்துவிட்டு மலசலகூடத்தின் கதவை மூடிவிட்டு அட்டன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். சிறுத்தையை அங்கிருந்து மீட்பதற்காக நல்லத்தண்ணி வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். பின்னர், உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த வனஜீவராசி அதிகாரிகள் குறித்த சிறுத்தையை […]

வழங்கிய வாக்குறுதி

மாத்தளை களுதாவளை 2ஆம் வட்டாரம், சிந்தாகட்டி குமர பெருமாள் கோவிலை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான வேலைத்திட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் சார்பில், மாத்தளை மாநகரசபை முதல்வர் சந்தனம் பிரகாஷால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமையவே இதற்கான வேலைத்திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாத்தளை, களுதாவலை 2ஆம் வட்டாரம், சிந்தாகட்டி குமர பெருமாள் கோவிலை சூழவுள்ள பகுதிகளில் சுமார் 80 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. குடிநீர் […]

சிறந்த கொழுந்து பறிப்பாளர் போட்டி

(அந்துவன்) ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் பணியாற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுள், சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவுசெய்வதற்கான இறுதி போட்டி நானுஓயா – ரதல்ல, தேயிலை மலையில் நேற்று (25) நடைபெற்றது. ஹொரண, தலவாக்கலை மற்றும் கெலனிவெலி பெருந்தோட்ட நிறுவனங்களில் கீழ் உள்ள 60 தோட்டங்களில் ஆரம்பக்கட்ட போட்டிகள் நடைபெற்று, அவற்றில் வெற்றிபெற்றவர்களில் இருந்து 42 பெண் தொழிலாளர்கள் இறுதிப் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். 20 நிமிடங்கள் வழங்கப்பட்டு, இக்காலப்பகுதிக்குள் கூடுதல் கொழுந்து பறிப்பவர் வெற்றியாளராக தெரிவுசெய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் […]

அட்டனில் போதைப்பொருட்களுடன் 15 இளைஞர்கள் கைது

சிவனொளிபாதமலையேறுவதற்கு பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் வருகை தந்த 15 இளைஞர்கள் கடந்த இரு நாட்களுக்குள் அட்டன் பொலிஸின் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அட்டன் ரயில் நிலைய வளாகத்தில் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே, ரயிலில் வந்த குறித்த இளைஞர்கள், பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். கொழும்பு, காலி, அநுராதபுரம் மற்றும் குருணாகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின், கஞ்சா, […]

அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார் – மோடி

 ‘‘உக்ரைன் போருக்கு தீர்வு காணும் அமைதி பேச்சுவார்த்தைக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது’’ என ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்ஸை சந்தித்து பேசிய பின் பிரதமர் மோடி கூறினார். ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸகால்ஸ் நேற்று இந்தியா வந்தார். அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இருவரும் 4-வது முறையாக சந்தித்து கொண்டனர். இந்திய வருகை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஓலப் ஸகால்ஸ், ‘‘இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே நல்ல உறவு உள்ளது. இதை […]

 மஹிந்தவுக்கு பிரதமர் பதவி?

 மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் திட்டம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். அதற்கு ஆளுங்கட்சி நண்பர்கள் ஆதரவு கோரியதாக பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண குறிப்பிடுகின்றார். மேலும் கருத்து தெரிவித்த அவர், தலையணையை மாற்றினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அரசாங்கம் வீட்டுக்குப் போக வேண்டும். பிரதமர் பதவியை மாற்றுவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளுக்கு விடை காண முடியாது. இந்த முயற்சியை நாங்கள் ஆதரிக்கவில்லை. மஹிந்த ராஜபக்ச இப்போது அரசியலில் இருந்து […]

மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, இந்தியக் கடன் (Photos)

மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் அதிகளவான மருந்துகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுகாதாரத் துறைக்கு அதிக அந்நியச் செலாவணியை அரசாங்கம் ஒதுக்கி வருவதாகவும் ஜனாதிபதி கூறினார். இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் (SLCMM) 6ஆவது வருடாந்த கல்வி அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இராணுவம், கடற்படை, வான்படை ஆகியவற்றின் மருத்துவப் படையணிகள், யுத்த காலத்தில், இராணுவ மருத்துவ சேவையை வடக்கு கிழக்கில் அதிகமாக […]