என் கேள்விக்கு என்ன பதில் – உதயா

தேர்தலை பின் போடும் சதித்திட்டத்தில் யார் செயல்படுகிறார்கள் என்ற சந்தேகம் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ம.உதயகுமார் தெரிவித்துள்ளார். நேற்றைய ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து உரையாற்றும் போதே உதயகுமார் இதனை கூறியுள்ளார். ஜனநாயகம் கேள்விக்குறியாக மாறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘பொருளாதாரம் மேம்ப்பட வேண்டுமாயின் முதலில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற சந்தேகம் இருந்தது அதனை ஜனாதிபதி செய்து முடித்துவிட்டார். இன்று பெருந்தோட்ட தொழிலாளர்களின் பொருளாதார நிலையோ படும் மோசமாக உள்ளது. பெருந்தோட்ட […]
AUS WMN won by 5 runs

கேப்டவுனில் நேற்றிரவு இடம்பெற்ற மகளீர் உலகக் கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதியில் அவுஸ்திரேலிய மகளீர் அணி, இந்திய அணியை 5 ஓட்டங்களால் வென்றுள்ளது. இதன்படி தொடர்ந்து 7வது முறையாக உலக மகளீர் உலகக் கிண்ண T20 தொடரின இறுதிச் சுற்றுக்கு அவுஸ்திரேலிய மகளீர் அணி முன்னேறியது. நேற்றைய தீர்மானமிக்க போட்டியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய மகளீர் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய பெர்த் மூனே 54 […]
தரவரிசையில் ஹசரங்க…

T20 பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கையணி வீரர் வனிந்து ஹசரங்க முதலிடத்தை பெற்றுள்ளார். 695 புள்ளிகளைப் பெற்றே அவர் முதலிடத்தை பிடித்துள்ளார். அதேபோல் சகலத்துறை வீரர்களுக்கான தரவரிசையில் வனிந்து 175 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தை பெற்றுள்ளார். ஒருநாள் போட்டிகளுக்கான தர வரிசையில் ஹசறங்க 242 புள்ளிகளைப் பெற்று 7 ஆவது இடத்தில் நீடிக்கின்றார்..
இந்து ஆலயங்கள் தாக்குதல்கள் குறித்து – பிரம்டன் நகர மேயர்

றொரன்டோ பெரும்பாக பகுதியில் இந்து ஆலயங்களை இலக்கு வைத்து அண்மைய நாட்களில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து இவ்வாறு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ஒன்றாரியோ மாகாணத்தின் பிரம்டன் நகர மேயர் பற்றிக் பிரவுண் இவ்வாறு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நான்கு தடவைகள் இந்து ஆலயங்கள் மீது பாரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் மிஸ்ஸாகுவா பகுதியில் ராமர் ஆலயம் ஒன்றின் […]
துப்பாக்கியுடன் திரிந்துள்ள கறுப்பினத்தவர்

ரொறன்ரோவில் கறுப்பினத்தவரான ஒருவர் கையில் துப்பாக்கியுடன் திரிந்துள்ளதாக பொலிஸார் குறித்த நபரின் ஆள் அடையாள விபரங்களையும் வெளியிட்டுள்ளனர். ரொறன்ரோ மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர். நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வீதியில் மற்றொருவரை துரத்திச் சென்றதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். நோர்த் யோர்க்கின் கிலி மற்றும் வில்சன் பகுதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எவ்வாறெனினும் இந்த சம்பவத்தினால் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அருகாமையில் காணப்படும் மெடோனா கத்தோலிக்க பாடசாலை […]
அவசரப் பிரிவுக்குள் அனுமதி கேட்டு 7 மணி நேரம் காத்திருக்க நேர்ந்த பெண்

கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் கம்பர்லேண்ட் பிராந்திய சுகாதார மைய அவசர அறையிலேயே புத்தாண்டுக்கு முந்தைய நாள் 37 வயதான, மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான Allison Holthoff மரணமடைந்தார். நோவா ஸ்கோடியாவில் மருத்துவமனை ஒன்றின் அவசரப் பிரிவுக்குள் அனுமதி கேட்டு 7 மணி நேரம் காத்திருக்க நேர்ந்த பெண் ஒருவர் இறந்த நிலையில், அந்த குடும்பம் தற்போது சிவில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அவரது கணவர் மேலும் தெரிவிக்கையில், தமது மனைவி தாங்க முடியாத வலியுடன் சிகிச்சைக்காக Amherst […]
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் மோதல் 11 பாலஸ்தீனியர்கள் பலி

இஸ்ரேல் படை திடீரென பகல் பொழுதில் மேற்கு கரை பகுதியில் தாக்குதல் நடத்தி உள்ளது. இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு கழகம் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், இஸ்ரேல் மீது சந்தேகத்திற்குரிய 3 நபர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அவர்கள் 3 பேரும், நாப்லஸ் பகுதியில் நடந்த அதிரடி நடவடிக்கையில் சுட்டு வீழ்த்தப்பட்டனர் என தெரிவித்து உள்ளது. இதுபற்றி சி.என்.என். வெளியிட்டு உள்ள தகவலில், இஸ்ரேலிய படைகளுடனான […]
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் ஃபாயிசாபாத் அருகே இன்று காலை 6.07 மணியளவில் 6.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் 6.25 மணிக்கு 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அதிர்ச்சி மறைவதற்குள் ஆப்கானிஸ்தானின் ஃபாயிசாபாத்தில் மீண்டும் 7.37 மணியளவில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து 4 நிலநடுக்கங்கள் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் 4 நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகளின் விவரம் வெளியாகவில்லை. […]
அமெரிக்க அதிபர் பைடன் தொடர் துப்பாக்கி சூடு எதிரொலியாக…….

அமெ.0ரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆரஞ்சு கவுன்டி பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து உள்ளன. இதனை தொலைக்காட்சி நிருபர் மற்றும் புகைப்பட கலைஞர் என இருவர் லைவ் நிகழ்ச்சியாக படம் பிடிக்க சென்று உள்ளனர். இந்த நிலையில், அவர்கள் நின்றிருந்த வாகனம் அருகே சென்ற மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி விட்டு அந்த பகுதியில் இருந்து தப்பினார். இந்த தாக்குதலில் காயமடைந்த 4 பேரில் தொலைக்காட்சி நிருபர் உயிரிழந்து விட்டார். ஸ்பெக்ட்ரம் நியூஸ் […]
மே 11 ஆம் திகதி விசாரணை

நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்தக் கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் W.M.R.விஜேசுந்தர தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மே 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்த வேண்டும் என்ற ஆணைக்குழுவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இன்று தேர்தல்கள் ஆணைக்குழ சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார் . எனினும், வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் திறைசேரி […]