விபத்து

பண்டாரவளை – மல்வத்தயில் லொறி ஒன்று விபத்திற்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர். மல்வத்தயிலுள்ள குறுக்கு வீதியொன்றில் பயணித்த லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லொறியே இன்று மாலை 3.30 மணி அளவில் விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்களில் நால்வர் தியத்தலாவ வைத்தியசாலையிலும் ஏனையோர் பண்டாரவளை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெலுவ மற்றும் சென். ஜேம்ஸ் உள்ளிட்ட தோட்டங்களை சேர்ந்த தோட்டத்தொழிலாளர்களே இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை […]
மெத்திவ்ஸ்

இலங்கையணியின் சகலத்துறை வீரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் இலங்கை அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் எதிர்வரும் நியூசிலாந்து விஜயத்தில் இணைந்துக்கொள்வார் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏஞ்சலோ மெத்திவ்ஸ் சுமார் இரண்டு வருடங்களின் பின்னர் இலங்கை ஒரு நாள் அணிக்கு அழைக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.
அரசியல் மைதானத்தை சுத்தம் செய்ய வேண்டும் – அனுர

தமது ஆட்சியில் அமைச்சர்களுக்கும் வழங்கப்படும் சகல வரப்பிரசாதங்களையும் இல்லாது செய்து அவர்களையும் சாதாரண அரச ஊழியர்களாக மாற்றுவதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க நேற்று (21) பதுளையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் இதனை கூறினார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதாகவும், முதலில் அரசியல் மைதானத்தை சுத்தம் செய்ய விரும்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஆட்சியாளர்களுக்கு விவசாயிகளினள் துக்கத்தை புரிந்துக் கொள்ள முடியவில்லை

தற்போதைய ஆட்சியாளர்களுக்கு விவசாயிகளினள் துக்கத்தை புரிந்துக் கொள்ள முடியவில்லை என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கல்கமுவ பகுதியில் நேற்று (21) இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் அவர் இதனை கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர் எதிரணியில் இருந்தும் மக்களுக்கு சேவையாற்றும் ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தி என தெரிவித்தார். அரசாங்கத்திற்கு மக்கள் துயரங்களை புரிந்துக் கொள்ளும் நரம்புகள் வெட்டப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படைப் பிரிவில் இலங்கை படைவீரர் உயிரிழப்பு

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படைப் பிரிவில் கடமையாற்றிய இலங்கை படைவீரர் திடீரென உயிரிழந்துள்ளார். மாலி நாட்டில் கடமையாற்றி வந்த குறித்த இலங்கை படைவீரர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். மதவச்சி பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஜீ.எல்.தேசப்பிரிய என்ற லான்ஸ் கோப்ரல் ஓருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 43 வயதான குறித்த படைவீரர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ம் ஆண்டில் அமைதி காக்கும் பணிகளுக்காக மாலி சென்ற குறித்த படைவீரர், இந்த நாட்டில் நாடு திரும்பவிருந்தார். […]
உலகின் மிகப்பெரிய சோதனை நடவடிக்கை

3,000 தொழிலாளர்கள் தங்கள் வழக்கமான ஐந்து நாள் வேலை வாரத்தின் அதே ஊதியத்தில் குறுகிய வேலை வாரத்தில் வழிநடத்தப்பட்டனர். உலகின் மிகப்பெரிய சோதனை நடவடிக்கையான 4 நாட்கள் வேலை வாரத்தின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகளின் வெற்றியைப் பெறுவதற்கு பெரும்பான்மையான பங்கேற்பு நிறுவனங்கள் புதிய வேலை மாதிரியைத் தொடரப்போவதாக அறிவித்தன. பிரித்தானியாவில், கடந்த ஆண்டு (2022) ஜூன் முதல் டிசம்பர் வரையிலான 6 மாத சோதனைத் திட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மொத்தம் 61 நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தன. இலாப […]
அமெரிக்காவை அதிரவைத்த தொடர் துப்பாக்கி சூடு

ஜனாதிபதிகள் தின விடுமுறையின் போது அமெரிக்காவை அதிரவைத்த தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்களில் சிக்கி பச்சிளம் குழந்தை, பிஷப் உள்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்தநாள் அங்கு ஜனாதிபதிகள் தினம் என்கிற பெயரில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 3-வது திங்கட்கிழமை இது கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அமெரிக்கா முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படும். வார இறுதி நாட்களாக சனி மற்றும் ஞாயிறுடன் இந்த பொதுவிடுமுறை வருவதால் அமெரிக்க மக்கள் […]
SA WMN won by 10 wickets

T20 மகளீர் உலகக் கிண்ண தொடரில் நேற்று இரவு கேப் டவுனில் இடம்பெற்ற 20 ஆவது போட்டியில் பங்களாதேஷ் மகளீர் அணியை தென்னாபிரிக்க அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் குரூப் A பிரிவில் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
கனடாவில் வருடாந்த பணவீக்கத்தின் அளவு

கனடாவில் வருடாந்த பணவீக்கத்தின் அளவு குறைவடைந்துள்ளது கடந்த டிசம்பர் மாதம் 6.3 வீதமாக காணப்பட்ட பணவீக்கம் ஜனவரி மாதம் 5.9 சத வீதமே பதிவாகியுள்ளது. உணவுப் பொருட்களின் விலை அதிகரித்த வேளையிலும் பணவீக்கம் குறைவடைந்துள்ளது இவ்வாறானதொரு நிலையில் வங்கிகளின் வட்டி வீதங்கள் குறைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக கூறப்படுகின்றது
கடவுச்சொற்களை பகிர்வோருக்கு எதிராக நடவடிக்கை – கனடா நிறுவனம்

netflix கனடா நிறுவனம் கடவுச்சொற்களை பகிர்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது. உலகின் முதல் நிலை இனிய பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான netflix ஊடாக திரைப்படங்கள் வெப் சீரிஸ்கள் போன்றவற்றை பார்ப்பவரா நீங்கள் அவ்வாறானால் இந்த எச்சரிக்கை உங்களுக்கானது. அதாவது netflix சந்தாதாரர்கள் அல்லாதவர்கள் அந்த வசதியை பயன்படுத்தி கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த மோசடியை தவிர்க்கும் நோக்கில் அதன்படி பயனர் ஒருவர் தான் netflix பயன்படுத்தும் பிரதான ஓர் இடத்தை குறிப்பிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]