புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் காணியற்றோருக்கு உதவ வேண்டும்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் கனடாவிற்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் யாழில் அவருக்குச் சொந்தமாக உள்ள காணியை காணியற்றோருக்கு பகிர்ந்தளித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழில் வேலணை – கரம்பொன் மேற்கை சொந்த இடமாகக் கொண்ட வரதா சண்முகநாதன் என்பவரே தனக்கு சொந்தமான காணியை 9 குடும்பங்களுக்கு தலா 2 பரப்பு வீதம் பகிர்ந்தளித்துள்ளார். பகிர்ந்தளிக்கப்பட்டோருக்கான காணி உறுதி வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (18-02-2023) மேலைக் கரம்பொன் முருகமூர்த்தி ஆலய மண்டபத்தில் அப்பகுதியின் கிராம சேவையாளர் புருசோத்தமன் […]

21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 04 பெண்கள் உள்ளிட்ட 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வட மாகாணம் மற்றும் கொழும்பை சேர்ந்த 21 பேரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த கனடா சகோதர்கள்

அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் சகோதர்கள் இருவர் கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 15ம் திகதி அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் கனடாவில் இருந்து தாயகத்திற்கு சென்றவர்கள் என கூறப்படுகின்றது. இந்த விபத்து தொடர்பாக தெரியவருகையில், கொழும்பு – பம்பலப்பிட்டியில் உள்ள சகோதரி சுகவீனமடைந்த நிலையில், அவரை பார்வையிடுவதற்காக கடந்த 14ம் திகதி மாலை திருக்கோவிலில் இருந்து அவர்களுடைய காரில் கொழும்பு நோக்கி பயணமாகியுள்ளனர். இதன்போது கொழும்பு தெற்கு அதிவேக […]

தேர்தல் நடத்தப்பட வேண்டும் – மஹிந்த

உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஒத்தி வைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்றைய (21) பாராளுமன்ற அமர்வு முடிந்த பின்னர் ஊடகவியலாளனர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார். ஊடகவியவாளர்: தேர்தல் ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன? முன்னாள் ஜனாதிபதி: தேர்தலை ஒத்திவைக்க அவசியமில்லை.தேர்தல் ஒன்று வேண்டும் அதுவே எமது எண்ணம் என்றார்.

IMF – உடன்பாடு ஜனாதிபதி வழங்கிய உறுதி

தற்போதைய வரிக் கொள்கையானது சாதாரண வரிக் கொள்கையன்றி மீட்பு நடவடிக்கை எனவும் இந்த செயற்பாடு சீர்குலைந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுளை மேற்கொள்ள முடியாது நிலை மட்டுமன்றி எந்தவொரு நாட்டுடனும் கொடுக்கல் வாங்கல் செய்யும் வாய்ப்பை இலங்கை இழக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சாதாரண வரவு செலவுத் திட்டம் அல்ல எனவும், பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற […]

பல ஆயிரம் கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு தரைமட்டமாகின

துருக்கியில் கடந்த 6-ந் தேதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது. துருக்கியின் 10 மாகாணங்களை நிலநடுக்கம் உருக்குலைத்துவிட்டது. வானளவுக்கு கம்பீரமாக உயர்ந்து நின்ற ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் கட்டிட குவியல்களாக மாறிப்போயின. இந்த துயரம் துருக்கி மட்டும் இன்றி அண்டை நாடான சிரியா வரை நீண்டது. அங்கும் நிலநடுக்கத்தின் பாதிப்பால் பல […]

பாகிஸ்தானில் தற்கொலை படை பெண் பயங்கரவாதி கைது

பாகிஸ்தானில் தற்கொலை படை பெண் பயங்கரவாதி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில் மஹால் பலூச் என்ற பெண்ணை பயங்கரவாத ஒழிப்பு படை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தது. அவரது கைப்பையில் இருந்து, தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தும் கவச உடை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட நிலையிலான 4 முதல் 5 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. […]

இலங்கையணி (A) வெற்றி

இங்கிலாந்து லயனஸ் அணிக்கு எதிரக நடைப்பெற்ற உத்தியோகப்பற்றற்ற மூன்றாவது ஒருநாள் (ODI) போட்டியில் இலங்கையணி (A) 6 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் 2-1 என்ற கணக்கில் இலங்கை A அணி வசமாகியுள்ளது.

ஆச்சரிய நகரத்தை அமைக்கிறது சவுதி அரேபியா

ஹாலோகிராபிக் தொழில்நுட்பத்தில் ஆச்சரிய நகரத்தை அமைக்கிறது சவுதி அரேபியா.சவுதி அரேபியாவின் புதிய மெகா திட்டத்தின் படி எம்பயர் எஸ்டேட் கட்டிடத்தை விட 20 மடங்கு பெரிய உட்புற சூப்பர் மெகா நகரத்தை உருவாக்குவது ஆகும். புதிய திட்டத்திற்கு முகாப் என பெயரிடப்பட்டு உள்ளது. அரபு மொழியில் கன சதுரம் என்று பொருள்படும் முகாப், 400 மீட்டர் உயரம், 400 மீட்டர் அகலம் மற்றும் 400 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும், இது உலகின் மிகப்பெரிய உட்புற நகரமாக […]

இனி எங்களுக்கு அகதிகள் வேண்டாம்-கியூபெக் மாகாண பிரீமியர்

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள Roxham Road என்ற பகுதியின் வழியாக ஏராளமான புகலிடக்கோரிக்கையாளர்கள் கனடாவுக்குள் நுழைகிறார்கள். இனி எங்களுக்கு அகதிகள் வேண்டாம், அனைத்து புகலிடக்கோரிக்கையாளர்களையும் வேறு மாகாணங்களுக்கு அனுப்புங்கள் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைக் கேட்டுக்கொண்டுள்ளார் கியூபெக் பிரீமியர். இந்த பகுதி கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ளது. ஆக, இந்த பகுதி வழியாக கனடாவுக்குள் நுழைவோர், கியூபெக் மாகாணத்தை வந்தடைகிறார்கள். இப்படி பல்லாயிரக்கணக்கனோர் கியூபெக்குக்குள் நுழைவதால் சலிப்படைந்துள்ள கியூபெக் மாகாண பிரீமியர், இதற்கு மேல் அகதிகளை […]