அமெரிக்காவின் சீனக் கொள்கை பகுத்தறிவு மற்றும் ஒலி பாதையில் இருந்து முற்றிலும் விலகியிருக்கிறது. சீனா மீதான விரோத கொள்கையை மாற்றிக்கொள்ளாமல் தவறான பாதையில் தொடர்ந்து வேகமாக சென்றால் மோதல் ஏற்படுவது நிச்சயம். அமெரிக்காவின் இந்த பொறுப்பற்ற செயல் இருநாட்டு மக்களின் அடிப்படை நலன்களையும், மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்பதை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும். தைவான் விவகாரத்தில் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அமெரிக்கா அவமதிக்கிறது. தைவான் பிரச்சினையில் அமெரிக்கா சிவப்பு கோட்டை தாண்ட கூடாது. […]

பெண்களின் உரிமைகளை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்

ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெண்கள் முன்னிலையில் இருப்பதாகவும், அந்த நிலைமையை மேலும் விரிவுபடுத்தி, உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். “பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கை” மற்றும் “பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்திட்டம்” ஆகியவை அதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். சார்க் அமைப்பில் பெண்களின் […]

கற்றல் உபகரணங்கள்

கொட்டகலை ஹரிங்டன்  தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும்  மாணவர்கள் அனைவருக்கும் கற்றல் உபகரணங்கள் கொட்டகலை பகுதி சமூக சேவகரும் அரசியல் ஆய்வாளருமான ராமன் செந்தூரன் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.  பாடசாலை அதிபர் திருமதி ராஜேஸ்வரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை மற்றும் மாணவர்கள் உட்பட ஹரிங்டன் தோட்ட உரிமையாளர் விஜயபாலவும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.