உக்ரைன் மீது தொடர் ஏவுகணை தாக்குதல்கள் நடத்திய ரஷ்யா

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் திகதி தனது இராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் இந்த இராணுவ நடவடிக்கைக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் பாதுகாப்பு படை தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. இந்த போரில் இருதரப்பிலும் பெருத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. உக்ரனின் உள்கட்டமைப்பை தகர்க்கும் நோக்கில் ரஷ்ய இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. அந்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள், இராணுவ தளங்களை குறித்து தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா […]

இத்தாலியை கலக்கிய கண்டி நங்கை! “Miss Srilanka” பட்டத்தை சுவிகரித்தார்!

இத்தாலியில் நடைப்பெற்ற  “Miss Srilanka ” போட்டியில் கண்டியை சேர்ந்த அழகியான கவிந்த பெர்ணாந்து மிஸ்  ஸ்ரீலங்கா பட்டத்தை சுவகரித்து இருக்கிறார். இத்தாலியில் இலங்கை பெண்களுக்கு இடையில் இந்த போட்டி நடைப்பெறுகிறது. கவிந்தாவிற்கு எமது வாழ்த்துக்கள்.  

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தை கமல் தயாரிக்கிறார்

சிம்பு நடிக்கும் புதிய படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமரன் தீவில் படகு கவிழ்ந்து 27 பேர் பலி

ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுக நகரம் ஹொடைடா. இங்குள்ள அல்லுஹேயா என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் செங்கடலில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய தீவான கமரன் தீவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக படகில் சென்று கொண்டிருந்தனர். படகு கடலில் கவிழ்ந்தது படகில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 27 பேர் இருந்தனர். இந்த படகு ஹொடைடா நகருக்கு அருகே செங்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் […]

தைவான் பிரச்சினையில் அமெரிக்கா சிவப்பு கோட்டை தாண்ட கூடாது

அமெரிக்கா-சீனா இடையிலான உறவு சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது. பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளும் கீரியும், பாம்புமாக சண்டையிட்டு வருகின்றன. குறிப்பாக தைவான் விவகாரத்தில் இருநாடுகளும் மோதலை நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்த நிலையில் சீனாவின் புதிய வெளியுறவு மந்திரியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற கின் காங், முதல் முறையாக சீன நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அமெரிக்காவுடனான பிரச்சினை குறித்து அவர் பேசியதாவது:- அமெரிக்காவின் சீனக் கொள்கை பகுத்தறிவு […]

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய்

இலங்கை ரூபாய் அமெரிக்க டொலருக்கு நிகரான உலகளவில் சிறந்த செயற்பாட்டு நாணயமாக மாறியுள்ளதாக பிரபல ப்ளூம்பெர்க் வணிக இணையதளம் குறிப்பிட்டுள்ளது. எப்படியிருப்பினும் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள், ஒரு டொலர் சுமார் 390 ரூபாயாக பின்வாங்கும் என்று Fitch Ratings கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிவாரணம் பெறுவதற்காக, வரிச் சுமைகளை அதிகரிப்பதன் மூலமும், நிவாரணங்கள் குறைப்பத்துள்ளமையினால் இலங்கையின் ரூபாய் பெறுமதி அதிகரித்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் வெளிநாட்டு கடன்களை செலுத்த ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ரூபாவின் […]

அதிகரித்துள்ள சொகுசு வாகனங்களின் விலைகள்

சொகுசு வாகனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக சொகுசு வாகனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே கூறுகையில், வட்டி வீதங்களின் அதிகரிப்பால் வாகன கொள்வனவும் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி டொலரின் பெறுமதி உண்மையில் வீழ்ச்சியடைந்திருந்தால், அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என இலங்கை […]

கனடாவில் பண வீக்கத்தை பயன்படுத்தி ஈட்டப்படும் கூடுதல் லாபம்

கனடாவில் பண வீக்கத்தை பயன்படுத்தி கூடுதல் லாபம் ஈட்டப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் முதல் நிலை மளிகை கடை நிறுவனங்கள் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளன. குறிப்பாக கனடாவின் மெட்ரோ, லாப்லோ மற்றும் எம்பயார் ஆகிய மூன்று மளிகைகடை நிறுவனங்களும் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளன. இந்த நிறுவனங்களின் பிரதம நிறைவேற்ற அதிகாரிகள் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இதன்போது பண வீக்கத்தை பயன்படுத்தி நிறுவனங்கள் உணவுப் பொருட்களில் கூடுதல் லாபம் […]

மோர்கேஜ் ப்ரொபஷனல் கனடா நிறுவனத்தின் கருத்து கணிப்பு

கனடாவில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தமது வாழ்நாள் முழுவதிலும் வீடு ஒன்றை கொள்வனவு செய்து விட முடியாது என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்து கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. மோர்கேஜ் ப்ரொபஷனல் கனடா என்ற நிறுவனத்தினால் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பில் பங்கேற்ற பலரும் தங்களினால் தங்களுடைய வாழ்நாளில் வீடு ஒன்றை கனடாவில் கொள்வனவு செய்ய முடியாது என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வருகின்றமை […]

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நில நடுக்கம்

கனடாவின் புதன்கிழமை அதிகாலை வேளையில் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் வான்கூவாரில் பகுதியில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் McNeill துறைமுகத்திற்கு 181 கிலோமீட்டர் தொலைவில் கடற் பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுமார் நான்கு தசம் மூன்று மேக்னிடியுட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவி சரிதவியல் அளவீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கம் காரணமாக எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.