புடின் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து போராட்டம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து அந்த நாட்டு மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். உக்ரைனில் இருந்து குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியமை உள்ளிட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ரஷ்ய ஜனாதிபதி மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய சிறுவர் உரிமைகள் ஆணையாளர் மீது குற்றம் சுமத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை சித்திரை புத்தாண்டுக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMF

IFM அரசாங்கத்துடன் ஏற்படுத்தி கொண்டுள்ள இணக்கப்பாட்டை எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் முன்வைக்க உள்ளது. கேகாலையில் வைத்து இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய இதனை கூறியுள்ளாலர். இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்க் கட்சிகள் அடங்களாக மாற்று கருத்துடையோரின் நிலைப்பாடுகளும் வெளிப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசம்

நுவரெலியா – கந்தப்பளை, பார்க் தோட்டத்துக்குட்பட்ட சந்திரகாந்தி (எஸ்கடேல்) தோட்டப் பிரிவில் பழமையான தேயிலை தொழிற்சாலையொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. பல வருடகாலமாக மூடிய நிலையில் காணப்பட்ட இத் தொழிற்சாலையானது, தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில்,  பின்னர் பார்க் தோட்ட முகாமைத்துவம் அதனை பொறுப்பேற்றது. அங்கு கழிவு தேயிலை அறைக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையிலேயே இன்று (18.03.2023) அதிகாலை தொழிற்சாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டு, தீ கொளுந்துவிட்டு […]

புடினுக்கு எதிராக பிடியாணை

ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடிpனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்;வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராணடு கடந்துள்ள நிலையில் சர்வதேச சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. புடின் போர் விதிகளை மீறி வருவதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடதக்கது.

சந்ரிக்காவின் நிலைப்பாடு

நலலாட்சியில் குற்றங்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பொலிஸாரும் துஷ்பிரயோகர்களாக மாறியதாக முன்னாள் ஜனாதிபதி சந்ரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.