தென்னாபிரிக்கா சாதனை வெற்றி

தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற T20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி சாதனை வெற்றியை பதிவு செய்தது. T20 போட்டியொன்றில் அதிகூடிய ஓட்டங்களை துரத்தி வெற்றிப் பெற்று தென்னாபிரிக்கா அணி இந்த சாதனையை புரிந்துள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பில் ஜொன்சன் சார்லஸ் அதிகப்பட்சமாக 118 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் […]

ஜூபிடஸ் வெற்றி

(அந்துவன்) கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவலப்பிட்டி கெட்டபுலா தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி பாடசாலை மைதானத்தில் அதிபரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் கொத்மலை வலய கல்விப்பனிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் அதிபர்கள், மற்றும் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதேச […]

வாழும் காலத்தில் வாழ்த்துவோம்

(அந்துவன்) “வாழும் காலத்தில் வாழ்த்துவோம்” எனும் தொனியில் தனது 90 வது அகவையில் கால்பதித்து கொண்டாடும் மலையகத்தின் மூத்த கல்விமான், ஆசிரியர் சிகரம் பிலீப் இராமையா அவர்களை கௌரவித்து இராகலை உயர் நிலை பாடசாலையில் விழா நடைபெற்றது. விழா ஏற்பாட்டாளர் சட்டத்தரணி எஸ்.தாயுமானவன் தலைமையில்  இடம்பெற்ற  இந்த விழாவில் ஆசிரிய சிகரம் பிலீப் இராமையா குறித்த சாரல் துளிகள் நினைவு எனும் பதிவுகள், ஆக்கங்கள், அடங்கிய 333 பக்கங்களை கொண்ட மலர் வெளியீடு மிக விமர்சையாக இடம்பெற்றது. […]

நாட்டை மேம்படுத்துவதற்கு அழைப்பு

இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  நம்பிக்கை தெரிவித்தார். மேற்படி, 25 வருடகால புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் இலக்குகளை நோக்கி அரசாங்கம் நாட்டை கொண்டுச் செல்லும் என எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை முன்னேற்றுவதற்கான தொடர்ச்சியான வேலைத்திட்டங்களில் இணைந்துகொள்ளுமாறு புலம்பெயர் மற்றும் இந்நாட்டின் இளம் சமுதாயத்தினருக்கு அழைப்பு விடுத்தார். ஹார்வட் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த […]