கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்து

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் குயிப்டோ என்ற பகுதியில் ராணுவ தளவாடங்களை வினியோகம் செய்யும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்தது. அதில் ஒரு பெண் உள்பட 4 ராணுவ அதிகாரிகள் இருந்தனர். அப்போது திடீரென அந்த ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் நடுவானில் இருந்து கீழே விழுந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை […]
IMF கடன் வசதி குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) கடன் வசதியை பயன்படுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி குறித்து இன்று ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இனி இலங்கையால் முன்னோக்கி செல்ல முடியும்.

எதிரணிகளின் அரசியல் விமர்சனங்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியிலும், சர்வதேச நாணய நிதியத்துடனான கொடுக்கல் வாங்கலை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றிகள் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இலங்கைக்கு கடன் வசதி வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” வங்குரோத்து நிலையை அடைந்த […]
இலங்கை வங்குரோத்தான நாடல்ல…

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் , கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாகவும், அதன்படி இலங்கை வங்குரோத்தான நாடல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எனவே இனிமேல் வழமையான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்கும் திறன் எமக்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (21) […]
ரணில் விக்ரமசிங்ஹவே நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர்: சச்சுதானந்தன்

நீலமேகம் பிரசாந்த் நாடு பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து உலக நாடுகளின் அனுதாபத்துக்கு உட்பட்ட நம் நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் எடுத்த நிலையில் தற்போது சர்வதேச நாணய நிதியம் 7 பில்லியன் ரூபா நிதி வழங்க அனுமதி கிடைத்துள்ளமை ரணிலின் அனுபவமிக்க தலைமைத்துவத்திற்கு கிடைத்த வெற்றி.ரணில் விக்ரமசிங்ஹ ஒருவரினாலேயே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபதலைவர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில் நாடு […]
IMF எடுத்துள்ள தீர்மானம்

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதியின் முதல் தவணை இன்னும் இரண்டு நாட்களில் வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தலைவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் இலங்கைக்கான தூதரகத் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் தற்போது இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட கடன் வசதி (EFF) பற்றிய மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பை நடத்துகின்றனர். இதற்கமைய இலங்கைக்கு 333 மில்லியன் டொலர்கள் […]
IPLல் : வியாஸ்காந்த்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள IPL போட்டியில் ராஜஸ்தான் றோயல் அணிக்கு (RR) வலை பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் புறப்படவுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வியாஸ்காந்த் இந்த விடயத்தை தெரியப்படுத்தினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பங்களாதேஷில் விளையாடியது எனக்கு நிறைய அனுபவங்களும், சர்வதேச விளையாட்டு வீரர்களின் அறிமுகங்களும் கிடைக்கப்பெற்றன. தற்போது IPL இல் ராஜஸ்தான் அணியின் வலை பந்து வீச்சு வீரராக […]
IMF – கடன் வசதி

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெற இத்திட்டம் உதவும். அரசாங்கத்தின் பல் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், கடன் நிலைத்தன்மையை அடையவும் அரசாங்கம் முயற்சித்து வரும் இலங்கைக்கு இது ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைகிறது. இந்த மாத தொடக்கத்தில், […]
கரப்பந்தாட்ட போட்டிக்கான நுழைவு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

நமுனுகுல யூத் கிளப் நடத்தும் கரப்பந்தாட்ட போட்டிக்கான நுழைவு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் ஏப்ரல் 1ம், 2ம் திகதிகளில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது. போட்டிகள் இலங்கை கரப்பந்தாட்ட விதிமுறைகளுக்கு அமைய நடைபெறும் என போட்டி ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.
முப்பத்திரண்டு இலட்சம் பெறுமதியான மூன்று முச்சக்கரவண்டிகள்

வெலிமட – அம்பகஸ்தோவ, கொடலிட பிரதேசத்தில் முப்பத்திரண்டு இலட்சம் பெறுமதியான மூன்று முச்சக்கரவண்டிகளை அடகு வைத்து அவற்றை இரகசியமாக திருடிச் சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகள் மூன்று இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, சம்பவம் தொடர்பில் வெலிமட மொரகொல்ல பலகல பிரதேசத்தில் வசிக்கும் மூவரை அம்பகஸ்தோவ பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.