பூனாகலை – கபரகலை தோட்டத்தில் மண்சரிவு

பண்டாரவளை – பூனாகலை – கபரகலை தோட்டத்தில் நேற்று இரவு மண்சரிவொன்று ஏற்பட்டது. அங்குள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட  மண்சரிவில்,இதுவரையில் 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்தும் தேடுதல் பணிகள் தொடர்வதாக எமது செய்தியாளர் கூறினார். இதனால் இந்தப் பகுதியில் வசிக்கும் பல குடும்பங்கள்; பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உரிய அதிகாரிகளுடன் இணைந்து பிரதேச மக்கள் மற்றும் ஹல்துமுல்ல பிரதேச சபை தலைவர் அசோக்குமார் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக வைத்திய […]

தோல்வி உறுதியாகியுள்ளது. அதனால்தான் தேர்தலை பிற்போடும் முயற்சியில் ஆளுங்கட்சி இறங்கியுள்ளது

(அந்துவன்) ” ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு முக்கிய இடத்தை வகித்தது. எனவே, ரணில் – ராஜபக்சவை விரட்டுவதற்கான ஆட்டத்தையும் விரைவில் ஆரம்பித்து, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், அக்கட்சியின் பெண்கள் அமைப்பின் முக்கியஸ்தருமான ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்தார். தலவாக்கலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை […]

பஸ்கள் வழங்க எவ்வாறு நிதி? – ஜீவன்

ஊழல் ஒழிப்பு.., ஊழல் ஒழிப்பு… என உறங்கும் வேளையிலும் கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், தமது கட்சியால் வழங்கப்பட்டுவரும் பஸ்களுக்கான உதவித்திட்ட வழிமுறைகள் தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார். இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, பஸ்கள் வழங்க எவ்வாறு நிதி கிடைக்கின்றது, அந்த வழிமுறையை சொன்னால் சிறப்பாக இருக்குமென நான் நாடாளுமன்றத்தில் கூறிய […]

வருடாந்த செயல்திறன் நிகழ்வு

கொட்டக்கலையில் இயங்கி வரும் எம்.எஸ் சர்வதேச பாடசாலையின் கல்வி பயிலும் மாணவர்களுக்கான வருடார்ந்த செயல்திறன் நிகழ்ச்சிகள் கொட்டகலையில் எம்.எஸ்.முத்துக்கருப்பன் தலைமையில் இடம்பெற்றது. மாணவர்களின் கல்வி திறனையும், மாணவர்களின் திறமைகளையும் வெளிக்காட்டும் விதமாக இந்நிகழ்வுகள் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பத்தனை ஸ்ரீபாத கல்லூரியின் உப பீடாதிபதி அன்டனி மெத்திவ்,தலவாக்கலை புனித பத்திரிசியார் பாடசாலை அதிபர் வணக்கத்துக்குறிய பிதா டொம்னிக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டதோடு பாடசாலையின் மாணவர்களுக்கு பரிசீல்களும் வழங்கி வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து […]

“நீலப் பெருஞ்சமரில்” வெற்றிபெற்ற அணி (படங்கள்))

கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 144ஆவது நீலப் பெருஞ்சமரில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றதுடன் பரிசளிப்பு விழா இன்று (18) பிற்பகல் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவத் தலைவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. கொழும்பு SSC மைதானத்தில் நேற்று (17) நடைபெற்ற போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை ஜனாதிபதி பார்வையிட்டிருந்தார். இதன்போது ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல […]

புடின் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து போராட்டம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து அந்த நாட்டு மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். உக்ரைனில் இருந்து குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியமை உள்ளிட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ரஷ்ய ஜனாதிபதி மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய சிறுவர் உரிமைகள் ஆணையாளர் மீது குற்றம் சுமத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை சித்திரை புத்தாண்டுக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMF

IFM அரசாங்கத்துடன் ஏற்படுத்தி கொண்டுள்ள இணக்கப்பாட்டை எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் முன்வைக்க உள்ளது. கேகாலையில் வைத்து இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய இதனை கூறியுள்ளாலர். இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்க் கட்சிகள் அடங்களாக மாற்று கருத்துடையோரின் நிலைப்பாடுகளும் வெளிப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசம்

நுவரெலியா – கந்தப்பளை, பார்க் தோட்டத்துக்குட்பட்ட சந்திரகாந்தி (எஸ்கடேல்) தோட்டப் பிரிவில் பழமையான தேயிலை தொழிற்சாலையொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. பல வருடகாலமாக மூடிய நிலையில் காணப்பட்ட இத் தொழிற்சாலையானது, தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில்,  பின்னர் பார்க் தோட்ட முகாமைத்துவம் அதனை பொறுப்பேற்றது. அங்கு கழிவு தேயிலை அறைக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையிலேயே இன்று (18.03.2023) அதிகாலை தொழிற்சாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டு, தீ கொளுந்துவிட்டு […]

புடினுக்கு எதிராக பிடியாணை

ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடிpனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்;வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராணடு கடந்துள்ள நிலையில் சர்வதேச சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. புடின் போர் விதிகளை மீறி வருவதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடதக்கது.