சிறார்களுக்கு உதவ ஜப்பான் அரசாங்கம் நன்கொடை

இலங்கையில் அபாய நிலையில் வாழும் சிறார்களுக்கு உதவுவதற்காக ஜப்பான் அரசாங்கம் 1.8 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது. UNICEF நிறுவனத்திடம் ஜப்பான் அரசாங்கம் இந்த நன்கொடையை வழங்கியுள்ளது. இதனூடாக 6 இலட்சத்திற்கும் அதிகமான சிறார்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர், சுகாதார மேம்பாட்டை வழங்கவும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையில், மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக UNICEF நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த வருடம் ஆரம்பமான பொருளாதார நெருக்கடியின் […]
துருக்கியில் கொட்டித் தீர்த்த கனமழை

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. சான்லியுர்ஃபா மற்றும் அதியமான் மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால், சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. அப்போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, ஒன்றோடொன்று மோதி சேதமடைந்துள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் கண்டெய்னர்களிலும், கூடாரங்களிலும் வசித்துவரும் நிலையில், திடீர் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். […]
ஜெர்மனியில் சிறுமியின் கொலை சம்பவம்

ஜெர்மனியில் சிறுமியின் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்டில் வீசப்பட்ட சிறுமியின் உடலை பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர். ஜெர்மனியில் கடந்த 13 ஆம் திகதி ரைலான்வாஸ் மாநிலத்தில் உள்ள வொரைடன் பேர்க் என்ற கிராமத்தில் 12 வயது சிறுமியானவர் தனது பெண் சிநேகிதியின் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த 12 வயது சிறுமி சிநேகிதியிடம் இருந்து 3 கிலோ மீற்றர் துரத்தில் உள்ள தனது வீட்டுக்கு காட்டு பாதையின் ஊடாக வந்திருக்கின்றார். இந்த சிறுமியானவர் தனது வீட்டை சென்று […]
விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு நோய்த்தொற்று பரவல்

விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு நோய்த்தொற்று பரவல் ஏற்படுவதைத் தடுக்க செல்லப்பிராணிகளுக்கு வேக்சின் அளிப்பது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நாய்களுக்கிடையே ஒரு வித வைரஸ் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தென் கொரிய ஆய்வாளர்கள் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். டெல்டா உள்ளிட்ட அதிக ஆபத்தை ஏற்படுத்தும் வேரியண்ட்கள் நாய்களுக்கு இடையே பரவும் என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் நாய்கள் மத்தியில் இதுபோன்ற பாதிப்பு கண்டறிவது இதுவே முதல் தடவை எனவும் பீகிள் […]
கனடாவில் வீட்டு விற்பனையில் பாரியளவு வீழ்ச்சி

கனடாவில் வீட்டு விற்பனையில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக ரியல் எஸ்டேட் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஓராண்டு கால ஒப்பீட்டு அடிப்படையில் கடந்த மாதத்தில் வீட்டு விற்பனை 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. புதிதாக வீடுகள் பதிவு செய்யப்படும் சந்தர்ப்பங்களும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வீட்டு விலைகளும் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது வீட்டு விலை 18.9 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. கனடாவில் கடந்த மாதம் சராசரி வீட்டு விலை 666437 டொலர்கள் எனவும், […]
ஹோண்டா ரக வாகனம் வைத்திருப்பவருக்கு அவசர அறிவுறுத்தல்

கனடாவில் ஹோண்டா ரக வாகனம் வைத்திருப்பவருக்கு அவசர அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் சுமார் 5 லட்சம் வாகனங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவிலும் அமெரிக்காவிலும் மொத்தமாக சுமார் ஐந்தரை லட்சம் ஹோண்டா ரக வாகனங்கள் இவ்வாறு மீள பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாகவும், கனடாவில் 52000 வாகனங்கள் மீள பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வாகனத்தின் இருக்கை பட்டியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இந்த வாகனங்கள் மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் விற்பனை செய்யப்பட்ட […]
சுரங்க ரயிலில் இஸ்லாமிய பெண் மீது கத்தியை காட்டி மிரட்டல்

ரொறன்ரோவில் TTC சுரங்க ரயிலில் இஸ்லாமிய பெண் மீது கத்தியை காட்டி மிரட்டி நபர் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளனர். தொடர்புடைய மிரட்டல் சம்பவம் மார்ச் 9ம் திகதி மதியத்திற்கு மேல் நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் ரொறன்ரோ பொலிசார் தெரிவிக்கையில், தெற்கு பகுதி நோக்கி புறப்பட்டு சென்றுள்ள சுரங்க ரயிலில், பாதிக்கப்பட்ட பெண்ணை நபர் ஒருவர் நெருங்கி, பேச்சுக்கொடுத்துள்ளார். தொடர்ந்து கோபமாக பேசத்தொடங்கிய அந்த நபர் திடீரென்று கத்தியை காட்டி மிரட்டியதாகவும், இதில் உயிர் […]
11 இலட்சம் நலன்புரிக் கொடுப்பனவு விண்ணப்பங்கள் சரிபார்ப்பு

நலன்புரிக் கொடுப்பனவுகளுக்காக தற்போது நடைபெற்று வரும் தகுதியானவர்களை அடையாளங் காணும் நடவடிக்கையில் இதுவரை செயற்படுத்தப்பட்டுள்ள தகவல் கணக்கெடுப்பு மற்றும் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட 11 இலட்சம் விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் 334 பிரதேச செயலகங்களில் இருந்து பெறப்பட்ட 37 இலட்சம் விண்ணப்பங்களின் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்கான தகுதி சரிபார்த்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. பரிசீலிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களில் அதிகளவானவை […]
Accident

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில், கொக்கல பகுதியில் கார் ஒன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையின் ஊடாக கவனக்குறைவாக பயணிக்க முற்பட்ட கார் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் பின்னர் காருக்குள் 2 பேர் சிக்கிக் கொண்டதையடுத்து, அவர்களைக் காப்பாற்ற அப்பகுதி மக்கள் கடுமையான பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தனர். குறித்த இருவரும் காரின் உள்ளேயே உயிரிழந்திருந்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
துருக்கி – சீன எல்லை

துருக்கி – சீன எல்லையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவை அடுத்து ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் அங்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் அதியமான் மற்றும் ஷான்லூயிஃபா மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சில அகதிகள் முகாம்கள் கூட சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.