Ireland national team to tour Sri Lanka

ஏப்ரல் மாதம் அயர்லாந்து கிரிக்கெட் அணி இலங்கை வரவுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது. அயர்லாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இரண்டு போட்டிகளும் காலி மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு இன்றுடன் நிறுத்தம்

டொரன்டோ நகரின் பொது போக்குவரத்து சேவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த மேலதிக பொலிஸ் பாதுகாப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதிலும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் மேலதிகமாக போலீஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அண்மைய நாட்களாக கனடிய பொது போக்குவரத்து கட்டமைப்புகளில் இடம்பெற்று வந்த தாக்குதல் சம்பவங்கள் அச்சுறுத்தல்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தொடரூந்துகள் என்பனவற்றில் போலீஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். […]

பாதசாரிகள் மீது மோதுண்ட பிக்கப் ரக வாகனம்

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் Amqui பகுதியில் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கனடாவில் பாதசாரிகள் மீது வேண்டுமென்றே வாகனத்தை செலுத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த விபத்து சம்பவத்தில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். பிக்கப் ரக வாகனம் ஒன்று பாதசாரிகள் மீது மோதுண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. வாகனத்தின் சாரதி வேண்டுமென்றே பாதசாரிகள் மீது வாகனத்தை மோதச்செய்து உள்ளதாக தென்படுகின்றது என போலீசார் தெரிவிக்கின்றனர். காயம் அடைந்தவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்துடன் […]

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆண்டு வருமானம் எவ்வளவு ??

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆண்டு வருமானம் எவ்வளவு இருக்கும் என்பது குறித்து சமீபத்திய ஆய்வு ஒன்றில், மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பெரும்பாலான கனேடியர்களுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆண்டு வருமானம் எவ்வளவு என்பது தெரியாத விடயமாகவே உள்ளது. இந்நிலையில், ஆய்வமைப்பு ஒன்று சமீபத்தில் மக்களிடம் கனடா பிரதமரின் ஆண்டு வருமானம் எவ்வளவு இருக்கும் தெரியுமா என கேள்வி எழுப்பியது. 1,000 கனேடியர்களிடம் கனடா பிரதமரின் ஆண்டு வருமானம் எவ்வளவு இருக்கும் தெரியுமா என கேள்வி […]

பணவீக்கத்தைத் தூண்டும் பிரதம மந்திரி ரிஷி சுனக்கின் அரசாங்கம்

NHS க்கு இது மிகவும் கடினமான நாளாக இருக்கும், Ms Saffron Cordery, NHS வழங்குநர்களின் துணை தலைமை நிர்வாகி, மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்தார். பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையில் (NHS) ஜூனியர் டாக்டர்கள் 72 மணி நேரம் வேலைநிறுத்தம் செய்வார்கள், சமீபத்திய நடவடிக்கை தொடங்கியதில் இருந்து மோசமான இடையூறு குறித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதிபர் ஜெர்மி ஹன்ட்டின் வரவுசெலவுத் திட்டத்துடன் ஒத்துப்போகும் வேலைநிறுத்தம், சிறந்த ஊதியம் மற்றும் நிபந்தனைகளுக்காக, டாக்டர்கள் சங்கமான பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் […]

பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென்மேற்கு பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் தங்கள் பீதியடைந்து தெருக்களுக்கு ஓடி வந்தனர். இந்நிலையில் பப்புவா நியூ கினியாவின் தலைநகரான போர்ட் மார்ஸ்பை நகரில் இருந்து 443 கி.மீ. வடக்கில் இன்று காலை 6.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி […]

தனதுசகோதரியை துப்பாக்கியால் சுட்ட 3 வயது சிறுமி

அமெரிக்காவில் 3 வயது சிறுமி ஒருவர் தனது சகோதரியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற அதிர்ச்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். இந்த நிலையில் உறவினர்களுடன் அமர்ந்து பெற்றோர் பேசிக்கொண்டிருந்த நிலையில் 2 குழந்தைகளும் வேறொரு […]

மருத்துவப் பயிற்சி தொடர்பில் ஜனாதிபதியினால் குழு

அரச பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் மருத்துவப் பயிற்சிக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஏனைய பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்காக, போதனா வைத்தியசாலைகளாகப் பயன்படுத்துவதற்கு பொருத்தமான அரச வைத்தியசாலைகளை இனங்காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார். சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொலவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் ஏனைய உறுப்பினர்களாக, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் ஆர். எம்.சமன் குசும்சிறி ரத்நாயக்க, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் (மருத்துவ சேவைகள்) வைத்தியர் […]

ஒலுவில் கடலில் நீராடச்சென்ற இளைஞர் உயிரிழப்பு

ஒலுவில் கடலில் நீராடச்சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஒலுவில் தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள கடலில் நண்பர்களுடன் நீராடச்சென்ற இளைஞர், அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளார். பிரதேச மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஒலுவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் பிரேத பரிசோனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொண்டு செயற்படுவதில்லை

பண்டிகை காலத்தில் மேலும் பல அத்தியாவசிய பெருடகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார். தற்போது இறக்குமதியாளர்களுக்கு பாதகமான நிலை ஏற்பட்டாலும் அதன் பயனை பொதுமக்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அமைச்சர் தெரிவிதுள்ளார். இதேவேளை ரூபாவின் பெறுமதி பலமடைந்துள்ளது எனவும் சில மக்கள் பிரதிநிதிகள் மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொண்டு செயற்படுவதில்லை எனவும் கூறியுள்ளார்.