கனடாவுக்கு புலம்பெயர உதவுவதாகக் கூறும் மோசடி இணையதளங்கள்

நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பது முதல், விரைவில் குடியுரிமை உறுதிமொழி எடுத்தல் ஒன்லைன் மூலமாகவே செய்யப்படலாம் என சமீபத்தில் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் புலம்பெயர்தல் அமைப்பு அறிவித்துள்ளது வரை எல்லாமே இணையம் வாயிலாக செய்யப்படும் நடைமுறைகளாக மாறிக்கொண்டே வருகின்றன. அதேநேரத்தில், இந்த நடைமுறைகள் குறித்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, அவற்றைப் பயன்படுத்தி இணையம் வாயிலாக மோசடிகள் நடக்கவும் வாய்ப்புகள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஆகவே, மார்ச் மாதம் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் புலம்பெயர்தல் அமைப்பின் மோசடி தடுப்பு மாதம் […]
இந்தியர்களின் சட்ட விரோத குடியேற்றம்

இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாக சட்ட விரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் இந்தியர்களின் எண்ணிக்கையும் சமீப காலமாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயை கடந்து இங்கிலாந்து கரைகளில் இறங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அந்தவகையில் கடந்த 2018, 19-ம் ஆண்டுகளில் இந்தியர்களின் சட்ட விரோத குடியேற்றம் இல்லாத நிலையில், 2020-ல் 64 பேர், 2021-ல் 67 பேர் இங்கிலாந்தில் நுழைந்துள்ளனர். […]
சமீப சீன வரலாற்றில் சக்தி வாய்ந்த தலைவராக பார்க்கப்படும் ஜின்பிங்

சீனாவின் அதிபராக பதவி வகித்து வந்த ஜீ ஜின்பிங் போட்டியின்றி, மூன்றாவது முறையாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். சீனாவின் மத்திய ராணுவ ஆணைய தலைவராகவும் ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிபர் பதவியில் 2 முறையே நீடிக்க முடியும் என்று இதுவரை இருந்து வந்த விதிமுறைகள் திருத்தப்பட்டன. இதனால், 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங் வாழ்நாள் முழுவதும் அந்த பதவியில் நீடிக்க வழிவகை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமீப சீன வரலாற்றில் சக்தி வாய்ந்த […]
மகன்களை கட்டாயப்படுத்தி ராணுவத்திற்கு அனுப்பும் அரசின் முடிவு

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் தங்களது கணவர்கள் மற்றும் மகன்களை கட்டாயப்படுத்தி ராணுவத்திற்கு அனுப்பும் அரசின் முடிவுக்கு பெண்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி சி.என்.என். பத்திரிகை வெளியிட்டு உள்ள செய்தியில், ரஷியாவுக்கான டெலிகிராம் சேனல் பகிர்ந்துள்ள வீடியோவில், 4 நாட்களே பயிற்சி பெற்ற தங்களது அன்புக்கு உரியவர்களை தாக்குதல் குழுவில் சேரும்படி, மார்ச் மாத தொடக்கத்தில் கட்டாயப்படுத்தி உள்ளனர் என பெண்கள் கூறுகின்றனர். அவர்களில் ஒரு […]
இலங்கையணியின் எதிர்பார்ப்பு மங்கியது

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்தது . நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் நோக்கில் இலங்கை அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது. கிறைஸ்ட்சேர்ச்சில் ஆரம்பமான முதலாவது […]
இலங்கைக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல் அத்தியாவசியமானது

இலங்கைக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல் அத்தியாவசியமானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்(Julie Chung) தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட சம்மேளனத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
ஒஸ்கார் விருது

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயிரிய விருதான ஒஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. 95வது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில், ‘ஆர்.ஆர்.ஆர்´ படத்தின் ´நாட்டு நாட்டு´ பாடலை பாடிய கால பைரவா, ராகுல் சிப்ளிகஞ்ச் பாடலின் Famous Steps-க்கு நடன கலைஞர்கள் நடனமாடி அரங்கில் இருந்தவர்களை குஷிப்படுத்தினர், இந்த பகுதியை தீபிகா படுகோன் அறிமுகம் செய்து வைத்தார். ஒஸ்கார் விழாவில் வழங்கிய விருதுகளின் தொகுப்புகள் பின்வருமாறு… *சிறந்த ஆவண […]
ஒரு போதும் தேர்தலுக்கு பயந்ததில்லை: மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண (SLPP) ஒரு போதும் தேர்தலுக்கு பயந்ததில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மொணராகலையில் நேற்று (12) இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சில கட்சிகள் மக்கள் விருப்பு, வெறுப்புகளை அறியாது மக்களின் உயிரை பணயம் வைத்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆகவே தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் மொட்டுக் கட்சி (SLPP) வெற்றி பெறுவது நிச்சயம் என அவர் மேலும் கூறினார்.
மட்டக்குளி, காக்கா தீவு-கடற்கரையைப் தூய்மைப்படுத்தும் திட்டம் (Photos)

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீயினால் இலங்கையின் கரையோரத்தில் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்புகளை குறைக்கும் வேலைத்திட்டம், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. கடற்கரையோரத்தில் உள்ள குப்பைகளை இயந்திரம் மூலம் அகற்றும் இந்தத் திட்டம் கொழும்பு மட்டக்குளி, காக்கா தீவு கடற்கரையில் ஆரம்பிக்கப்பட்டது. கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை […]
மத்தியதரைக் கடலில் நெரிசல் மிகுந்த படகுகள் மீட்பு

மத்தியதரைக் கடலில் நெரிசல் மிகுந்த படகுகள் சிக்கலை எதிர்கொண்டதை அடுத்து, இரண்டு இத்தாலிய துறைமுகங்களில் 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டுள்ளனர். மூன்று படகுகள் இத்தாலியின் கரையோரத்தில் மிதந்து செல்வதைக் கண்டறிந்ததை அடுத்து, ஒரு பெரிய மீட்பு நடவடிக்கையை முடித்து வருவதாக கடலோர காவல்படை கூறியுள்ளது. இந்நிலையில் ஒன்று கலாப்ரியன் நகரமான க்ரோடோனுக்கு தெற்கிலும், இரண்டு தெற்கிலும், ரோசெல்லா அயோனிகாவிற்கு அப்பாலும் இருந்தது. கடலோர காவல்படை வீடியோக்கள் இரவுநேர கரடுமுரடான கடல்களில் ஒரு பெரிய […]