ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண (SLPP) ஒரு போதும் தேர்தலுக்கு பயந்ததில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மொணராகலையில் நேற்று (12) இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சில கட்சிகள் மக்கள் விருப்பு, வெறுப்புகளை அறியாது மக்களின் உயிரை பணயம் வைத்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆகவே தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் மொட்டுக் கட்சி (SLPP) வெற்றி பெறுவது நிச்சயம் என அவர் மேலும் கூறினார்.