ஹாம்பர்க்கில் எச்சரிக்கை

ஜெர்மனியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் எழுவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களில் துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவர் அடங்குவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அங்குள்ள தேவாலயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அடையாளம் தெரியாத ஒருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் மிக ஆபத்துக்கான எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால், குடியிருப்பு வாசிகளை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும்ஹாம்பர்க் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன. விசாரணகள் […]
போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சென்ற பஸ் ரெயில் மீது மோதி விபத்து

நைஜீரிய நகரங்களில் பொதுவாக போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றப்படாமல் விபத்துகள் அதிகமாக நடைபெறுகின்றன. நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நேற்று ரெயில் மீது பஸ் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். முன்னதாக அரசு ஊழியர்களை வேலைக்கு அழைத்துச் சென்ற பஸ் ஒன்று லாகோசில் உள்ள இகேஜா பகுதியில் இன்ட்ரா-சிட்டி ரெயில் மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் சென்ற 6 பேர் உயிரிழந்தனர். 84 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரெயிலில் இருந்த […]
ஆப்கானிஸ்தானில் கவர்னர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து தீவிரவாதம் அதிகரித்து வருகிறது. தற்போது அங்கு பால்க் மாகாணத்தில் உள்ள கவர்னர் அலுவலகத்தில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் மாகாண கவர்னரான தவுத் முஸ்மல் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத […]
சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராமை பயன்படுத்த முடியாத நிலை

பிரபல சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராமை உலகெங்கும் 235 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். புதன் அன்று இதில் ஏற்பட்ட கோளறினால், உலகில் பல நாடுகளில் இதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் 46 ஆயிரம் உபயோகிப்பாளர்கள் பாதிக்கப்பட்டதாக டவுன் டிடெக்டர் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. பிரிட்டனில் 2 ஆயிரம் பேரும், இந்தியா மற்றும் ஆஸ்த்ரேலியாவில் தலா ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளது.
சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக செய்யப்பட்டுள்ளார் ஜி ஜின்பிங்

சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தேசிய மக்கள் காங்கிரசின் ஏறக்குறைய 3,000 உறுப்பினர்கள் ஒருமனதாக வாக்களித்துள்ளனர். தேர்தலில் வேறு யாரும் போட்டியிடவில்லை என்று செய்தி வெளியாகி உள்ளது. மேலும் சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சீன நாடாளுமன்றத்தின் தலைவராக ஜாவோ லெஜியும், புதிய துணை அதிபராக ஹான் ஜெங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபரில், ஜி ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் […]
அரசியல் என்பது சேவை – ஜீவன்

“ அரசியல் என்பது மக்களுக்கு சேவைசெய்வதற்கானதோர் சிறந்த களமாகும். எனது அரசியல் பயணமும் மக்களுக்கானது. மக்களுக்கு சேவை செய்யவே அரசியல் பலத்தையும், அமைச்சு பதவியையும் பயன்படுத்தி வருகின்றேன். எனவே, மக்கள் தமது பிரச்சினைகளை என்னிடம் தாராளமாக எடுத்துக்கூறலாம். என்னால் முடிந்தவற்றை செய்து தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு தயாராக உள்ளேன்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் […]
1st Test, Christchurch

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிறைஸ்ட் சேர்சில் இடம்பெறுகின்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சம் சிறிய ஓய்வுக்கு பின்னர் விளையாடுகின்றார்.
உக்ரைன் மீது தொடர் ஏவுகணை தாக்குதல்கள் நடத்திய ரஷ்யா

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் திகதி தனது இராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் இந்த இராணுவ நடவடிக்கைக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் பாதுகாப்பு படை தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. இந்த போரில் இருதரப்பிலும் பெருத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. உக்ரனின் உள்கட்டமைப்பை தகர்க்கும் நோக்கில் ரஷ்ய இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. அந்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள், இராணுவ தளங்களை குறித்து தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா […]
இத்தாலியை கலக்கிய கண்டி நங்கை! “Miss Srilanka” பட்டத்தை சுவிகரித்தார்!
இத்தாலியில் நடைப்பெற்ற “Miss Srilanka ” போட்டியில் கண்டியை சேர்ந்த அழகியான கவிந்த பெர்ணாந்து மிஸ் ஸ்ரீலங்கா பட்டத்தை சுவகரித்து இருக்கிறார். இத்தாலியில் இலங்கை பெண்களுக்கு இடையில் இந்த போட்டி நடைப்பெறுகிறது. கவிந்தாவிற்கு எமது வாழ்த்துக்கள்.
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தை கமல் தயாரிக்கிறார்
சிம்பு நடிக்கும் புதிய படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.