கனடாவில் பாடசாலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப் போவதாக எச்சரிக்கை

கனடா ஒன்றாரியோவின் மிஸ்ஸிசாகுவா மற்றும் பிரம்டன் ஆகிய பகுதிகளின் பாடசாலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணைய வழியாக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த அச்சுறுத்தல் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். Holy Name of Mary Secondary School, Louise Arbour Secondary School, St. Thomas Aquinas Secondary School, Notre Dame Secondary School, Chinguacousy Secondary School, மற்றும் Ascension of Our […]
கனடாவில் ரயில் ஒன்றில் சக பயணி மீது தாக்குதல்

நச்சுப் பொருள் ஒன்றை ஸ்ப்ரே செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரீ.ரீ.சீ ரயில் சேவையில் பயணம் செய்து கொண்டிருந்த பயணி ஒருவர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எந்தவிதமான தூண்டுதலும் இல்லாமல் திடீரென குறித்த சந்தேக நபர், சக பயணி மீது நச்சு கலந்த பொருள் ஒன்றை ஸ்பிரே செய்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபரின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 35 முதல் […]
ரமழான் பண்டிகை: ஜனாதிபதி அறிவுறுத்தல்

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்திற்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்டங்கள் பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்வரும் ரமழான் பண்டிகை காலத்திற்கான நிவாரண நடவடிக்கையாக ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதன்படி, 01 கிலோ பேரீச்சம்பழத்திற்கு 200 ரூபா வீதம் விதிக்கப்பட்டிருந்த வரி , 01 கிலோவுக்கு 01 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி செலவிடப்படாத வகையில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் பரிந்துரையின் பேரில் பல்வேறு […]
250,000 கனேடிய டொலரை பம்பர் பரிசாக வீட்டிற்கு எடுத்துச் சென்ற நபர்

கனடாவில் லொட்டரியில் ஒரு மில்லியன் டொலர் வெல்வதாக கனவு கண்ட நபருக்கு உண்மையிலேயே கனவு நனவானது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், பிராம்ப்டனில் வசிக்கும் 34 வயதான லெமோர் மோரிசன் தனது இருபது வயதிலிருந்து லொட்டரி விளையாடி வருகிறார். லொட்டரியில் 1 மில்லியன் கனேடிய டொலர் வென்றதாக கனவு கண்ட பிறகு, அவர் ஒரு டிக்கெட்டையும் வாங்கலாம் என்று எண்ணினார். ஒரு நாள் இந்த டிக்கெட்டில் எனது அதிர்ஷ்டத்தை சோதிக்க முடிவு செய்து, அவர் உடனடி டயமண்ட் கிளப்பைத் […]
இந்தோனேசியாவின் பயங்கர நிலச்சரிவு

இந்தோனேசியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள செராசன் தீவில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது இதனால் அங்குள்ள நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த நிலையில் கனமழை, வெள்ளத்தை தொடர்ந்து செராசன் தீவில் உள்ள பல இடங்களில் நேற்று முன்தினம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலியாகினர். டஜன் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் […]
சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ள கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம் அவ்வப்போது தனது தேடுபொறியான கூகுள் தளத்தில், பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் உள்ளிட்ட சிறப்பு நாட்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாசாரத்தைச் சேர்ந்த பெண்களைக் குறிப்பிடும் வகையில் இந்த டூடுல் அமைந்துள்ளது. மருத்துவம், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் […]
பள்ளிக்கு சென்ற மாணவ மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம்

ஈரான் நாட்டில் கடந்த ஆண்டு ஹிஜாப் விவகாரத்தில் போலீஸ் காவலில் மாஷா அமினி என்ற இளம்பெண் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக பரவியது. இந்நிலையில், அதற்கு அடுத்த ஒரு மாதத்தில் கடந்த நவம்பரில் பள்ளிக்கு சென்ற மாணவ மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பரவலாக நடந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது. ஷியா பிரிவு முஸ்லிம்களின் நகரான குவாம் நகரில் நவம்பரில் தொடங்கிய இந்த நிகழ்வு ஈரானில் உள்ள […]
எகிப்தின் கெய்ரோவில் தடம் புரண்ட ரெயில்

எகிப்தின் கெய்ரோவில் நேற்று ரெயில் ஒன்று தடம் புரண்டதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர் என்று எகிப்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எகிப்து போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலியுப்பில் உள்ள ரெயில் நிலைய நடைமேடையில் ரெயில் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காயமடைந்தவர்களுக்கு உதவ, சுமார் 20 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு சென்றன. ரெயில் தடம் புரண்டதற்கான காரணத்தைக் கண்டறியவும், இதற்கு பொறுப்பானவர்களைக் கண்டறியவும் ஒரு குழுவை அமைக்குமாறு எகிப்து […]
NEW – SLC

நியூசிலாந்து கிரிக்கெட் அணி தமது உத்தியோகப்பூர்வ ஜெர்சிசை ஏலம் விட தீர்மானித்துள்ளது. அண்மையில் ஏற்பட்ட கேப்ரியரின் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது இங்கிலாந்து – நியூசிலாந்து டெஸ்டில் பாவித்த ஜெசியே ஏலத்தில் விடப்படவுள்ளது. நியூசிலாந்து செஞ்சிலுவை சங்கம் மற்றும் நியூசிலாந்தின் மத்திய வங்கி ஆகியவை இந்த திட்டத்தில் இணைந்துள்ளன. இதற்காக இலங்கை அணியுடன் எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பறவுள்ள ஒருநாள் போட்டியில் கிடைக்கும் வருமானம் ஒதுக்கப்படவுள்ளது.
“கோதுமை மா” பற்றிய அறிவிபபு

ப்ரீமா மற்றும் செரன்டிப் கோதுமை மாவின் விலையை குறைக்க ப்ரீமா மற்றும் செரன்டிப் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி, ஒரு கிலோ கிராம் ப்ரீமா மற்றும் செரன்டிப் கோதுமை மாவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, 450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படுவதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலாகவும் வகையில் பாணின் விலை குறைக்கப்படுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.