தனியார் பஸ் உரிமையாளர்கள் விசேட அறிவிப்பு

எதிர்வரும் ஜுலை மாதத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ பேருந்து கட்டணச் சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் இடம்பெறும் தேர்தல் பேரணிகள் காரணமாக பேருந்து தொழிற்துறைக்கு சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்து ஆலயங்களுக்கான காசோலைகள்

சஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைவாக இந்து ஆலயங்களுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஷ்வரன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது. கையப்புகலை ஹெரோ கீழ்ப்பிரிவு தோட்டங்களில் உள்ள ஆலயங்களின் புணர்நிர்மான பணிகளுக்கான நிதி வழங்கி வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் இ.தொ.கா வின் கொத்மலை பிரதேச அமைப்பாளர் மூர்த்தி, கொத்மலை பிரதேச […]

இலங்கைக்கு உதவ அமெரிக்கா தயார்

சர்வதேச நாணய நிதியத்தை (IMF) நோக்கிய இலங்கையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்குவதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜேனட் யெலன் கூறியுள்ளார் நேற்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற தொலைப்பேசி கலந்துரையாடலில் அவர் இதனை கூறியுள்ளார்.  

கொட்டகலைக்கு விரைவில் தீயணைப்பு வாகனம்

கொட்டக்கலை பகுதிக்கு விரைவில் தீயணைப்பு கருவிகள் உட்பட தீயணைப்பு வாகனமொன்றினை ஜப்பான் அரசாங்கத்தின் உதவியோடு வழங்குவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கொட்டகலை நகரில்  இடம்பெற்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளை பார்வையிட்ட போதே பின்வரும் விடயத்தை தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவரோடு அடுத்த வாரம் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அச்சந்தர்பத்தில் இவ்விடயத்தையும் முன்வைத்து கொட்டக்கலை பகுதிக்கு விரைவில் தீயணைப்பு வாகனத்தை பெற்று தருவதாக கூறியதோடு பாதிக்கப்பட்ட வர்த்தக ஸ்தாபனதற்கு […]

SLFP – பதில் பொதுச் செயலாளர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) பதில் பொதுச் செயலாளர் பதவிக்கு சரத் ஏக்கநாயக்கவை (Sarath Ekanayake ) நியமித்துள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர வௌிநாடு சென்றுள்ள காரணத்தினால் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் இன்று நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதல்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் பெரும் திண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதேவேளை பாகிஸ்தானில் இன்று நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் குறைந்தபட்சம் 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் பலோசிஸ்தான் மாகாணத்தின் போலான் நகரில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளொன்றில் வந்த தற்கொலை குண்டுதாரி, பொலிஸ் ட்ரக் ஒன்றின் மீது மோதியதாக பொலிஸ் அதிகாரி அப்துல் ஹை ஆமிர் தெரிவித்துள்ளார்.

புளோரிடா நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கை

அமெரிக்காவின் புளோரிடாவில் மூளை உண்ணும் அமீபா வைரஸால் முதல் மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது: இந்த மரணம் குறித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மற்றொரு தொற்றுநோயின் அறிகுறியா என்ற அச்சத்தில் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த மரணத்திற்குப் பிறகு புளோரிடா நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் இந்த அமீபா குறித்து போதிய விழிப்புணர்வுடன் இருக்குமாறு நிர்வாகம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது இறந்தவரின் அடையாளத்தை புளோரிடா சுகாதாரத் துறை இன்னும் வெளியிடவில்லை. […]

பறவைகளுக்கு உணவளிக்க வேண்டாம்

பிரித்தானியாவில் ஒரு பிரபலச் சுற்றுலாத்தலத்தில் பூனைகள் அளவு பெரிதாக உள்ள எலிகளால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இந்த எலிகள் பாறைகளை அரிப்பதாக அஞ்சப்படும் நிலையில் டென்பை (Tenby) ஊரின் காசல் கடற்கரையில் (Castle Beach) எலிகள் அங்குமிங்கும் ஓடும் காணொளிகள் இணையத்தில் பரவுகின்றன. அதேசமயம் அண்மைய மாதங்களில் எலி பிரச்சினை மோசமாகி வருவதாகக் குடியிருப்பாளர்கள் செய்தி நிறுவனத்திடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பறவைகளுக்கு உணவளிக்க வேண்டாமென்றும் உணவைக் கீழே போடவேண்டாமென்றும் அவ்வட்டார அதிகாரிகள் மக்களை […]

அமெரிக்காவில் தீ பற்றி எரிந்த எரிபொருள் ஏற்றிச்சென்ற டிரக்

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் எரிபொருள் ஏற்றிச்சென்ற டிரக் மரத்தில் மோதியதில் தீ பிடித்து எரிந்தது. ஃபிரடெரிக்கில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதியதில், டேங்கர் வெடித்து தீ பற்றி எரிந்தது. தீ கொளுந்து விட்டு மளமளவென எரிந்ததில் டிரக் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தீ விபத்தால் அப்பகுதியில் இருந்த 6 வீடுகள் மற்றும் 5 வாகனங்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கபப்டுகின்றது.

மெக்சிகோவுக்கு விடுமுறையை கழிக்க சென்ற பெண் கொலை

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மெக்சிகோவில் பிறந்தநாள் கொண்டாட சென்ற இடத்தில் காதலனால் கொல்லப்பட்டுள்ளார். குறித்த வழக்கில் அந்த காதலன் கைதாகியுள்ளதாகவே பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், கொல்லப்பட்ட பெண் 23 வயதான Kiara Agnew எனவும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் Dawson Creek பகுதியை சேர்ந்தவர் எனவும் குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. மெக்சிகோவுக்கு விடுமுறையை கழிக்க செல்ல வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது எனவும், இந்த நிலையில் தமது […]