தொலைபேசி அழைப்புக்களின் ஊடாக 5.4 மில்லியன் டொலர்கள் இழப்பு

கனடாவில் கடந்த 2022 ஆண்டில் மோசடி தொலைபேசி அழைப்புக்களின் ஊடாக அல்பர்ட்டா மக்கள் 5.4 மில்லியன் டொலர்கள் பணத்தை இழக்கநேரிட்டுள்ளது. இது கடந்த 2020ம் ஆண்டை விடவும் இரட்டிப்பு மடங்கு அதிகளவு பண இழப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் போலி தொலைபேசி அழைப்புக்கள் வாயிலாக 849 பேர் மோசடிக்கு உள்ளாகியுள்ளனர் என்பதுடன் 5.4 மில்லியன் டொலர் பணம் இழக்கப்பட்டுள்ளது. அதிகளவில் சிரேஸ்ட பிரஜைகளே இந்த மோசடிகளில் சிக்கி ஏமாற்றப்பட்டுள்ளனர். உறவினர்கள் பற்றிய போலித் தகவல்களை […]

அண்மையில் காணாமல் போன விமானம்

ஒன்றாரியோவில் அண்மையில் காணாமல் போன விமானம் மீட்கப்பட்டுள்ளது. எனினும், இந்த சிறிய விமானத்தில் பயணம் செய்த இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர். விமானம் காணாமல் போனதைத் தொடர்ந்து கனேடிய விமானப்படையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கள் விமானத்தை மீட்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. விமானத்தில் பயணம் செய்தவர்களை உயிருடன் மீட்க முயற்சிக்கப்பட்ட போதிலும், அந்த முயற்சி கைகூடவில்லை என மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒன்றாரியோவின் ச்சாவுசர் குளத்தில் இந்த விமானம் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொலைந்த விமானத்தை தேடும் பணிகளுக்கு பெரும் […]

இராணுவ பட்ஜெட்

தொடர்ந்து 8வது ஆண்டாக இந்த ஆண்டும் சீனா இராணுவ பட்ஜெட்டை உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு இராணுவத்துக்கான பட்ஜெட் 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும் இது கடந்த ஆண்டை விட 0.1 சதவீதம் மட்டுமே அதிகமாகும். அமெரிக்காவில் இந்த ஆண்டு இராணுவத்துக்கு சுமார் ரூ.66 லட்சத்து 67 ஆயிரத்து 760 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் விசேட கலந்துரையாடல்

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச மாட்டில் இலங்கை தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இலங்கை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. மனித உரிமைகளை மீறல், பயங்கரவாத செயற்பாடுகள், நீதிமன்ற சுயாதீனம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான 52 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெறுகின்றமை குறிப்பிடதக்கது.

கொட்டகலையில் பகுதிநேர கடையடைப்பு

கொட்டகலை நகரில் 05ஃ03ஃ2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தீ விபத்தின் போது தக்க தருணத்தில் தீயணைப்பு கருவிகள் இன்மையால் தீ ஏற்பட்ட கடையில் பொருட்கள் முற்றாக தீக்கரையாகியது. எனவே இனிவரும் காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படும் பட்சத்தில் கொட்டகலை பெற்றோலிய களஞ்சிய சாலையில் போதியளவு தீயணைப்பு கருவிகளை வழங்குமாறும் தீக்கரையான வர்த்தக நிலையத்துக்கு வருத்தம் தெரிவிக்கும் நோக்கிலும் கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் கொட்டகலை நகரத்தில் கடைகள் அனைத்தும் திங்கட்கிழமை பகுதிநேரமாக கடைகள் அடைக்கப்பட்டது. இது தொடர்பில்  […]

கிண்ணத்தை சுவீகரித்தது சன்பேர்ட்ஸ் அணி

நுவரேலியா உதைப்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தலைவர் கிண்ண இறுதிப் போட்டியில் சன் பேர்ட்ஸ் அணி வெற்றி வாகை சூடியது. போட்டியில் நான்குக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் சன் பேட்ஸ் அணியினர் வெள்ளி கிண்ணத்தை கைப்பற்றினர். போட்டியின் முதல் பாதியில் சன் பேட்ஸ் அணி 3.0 என முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாம் பாதியில் மேலும் ஒரு கோலினையும் அடித்தது. இதன் மூலமாக 4 க்கு 2 என கணக்கில் சன் பேர்ட்ஸ் அணி வெற்றி […]

மரக்கறி லொறி விபத்து

நுவரெலியா, லபுக்கல பகுதியில் மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறி வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று (5) இடம்பெறுள்ளது. இதன்போது லொறியில் பயணித்த 14 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்துக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா கம்பளை பிரதான வீதியில் நுவரெலியா, லபுக்கல தேயிலை […]

தாலிக் கயிற்றினால் கழுத்து நெரித்து கொலை

தாலிக் கயிற்றினால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய இளம் பெண்ணின் சடலத்தை புஸல்லாவ சோகமா தோட்ட மேல் பிரிவிலிருந்து நேற்று முன்தினம் (4) மீட்டுள்ளதாக புஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் எல்பொட தோட்ட கட்டுகித்துல ஜன உதான கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய எஸ். நிரஞ்சலா தேவி என்பவர் ஆவார். அந்தப் பெண் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே தனது முதல் கணவரை பிரிந்து, வேறொரு நபரை இரண்டாம் திருமணம் […]

ரோஹிங்யா அகதிகள் குடியிருப்பில் தீ

பங்களாதேஷில் ரோஹிங்யா அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 க்கும் அதிகமானோர் குடியிருப்புகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயினால் சுமார் 2000 குடியிருப்புகள் வரை எரித்து சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் சுமார் 12,000 வரையிலான புலலிடலாளர்கள் இருப்பிடங்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயினால் ஏற்பட்ட சேதங்கள் இதுவரை வெளியாகாத நிலையில் 100 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர். தீ பரவல் ஏற்பட்ட இடத்தில் 30 க்கும் அதிகமாக புகலிட முகாம்கள் உள்ளதாகவும் மேற்படி […]

கொட்டகலை தீ விபத்து

கொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இத்தீ விபத்து 05.03.2023 அன்று இரவு 09.30 அளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் பசார் பகுதியில் வீதிக்கு அருகாமையில் உள்ள ஒரே கட்டிடத்தில் அமையப்பெற்றுள்ள தளபாட கடை மற்றும் வீடு ஆகியன முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. திம்புள்ள பத்தனை பொலிஸார், மற்றும் பிரதேச […]