தொழிற்சங்க போராட்டம் தோல்வி:

நேற்றைய தொழிற்சங்க போராட்டம் தோல்வியடைந்தாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனை கூறினார். (நேற்றைய தொழிற்சங்க போராட்டம் தோல்வியடைந்தது. இதனை ஐ.ம.சக்தி, முன்னிலை சோசலிச கட்சி ஆகியன இணைநதே இதனை செய்தனர். அதாவது சுகாதார துறையில் 5 வீதமானோர் சரி பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்படவில்லை. போக்குவரத்து துறையும் தபால் துறையும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டதாக அறியேன். ஒன்றாய் சேர்ந்து போராடுவோம் என்றவர்களுக்கு இணைந்து செயற்பட […]
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும்

சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கையின் கடன் விண்ணப்பத்திற்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆதரவளிப்பதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான ஆவணங்களை சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி நிதியமைச்சகத்திடம் கையளித்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். இலங்கையில் குறுகிய கால கடன் வசதிகளை செலுத்துவதற்கு இரண்டு வருடங்கள் வழங்கப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசாரணைக்கு பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங், […]
FIFA

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தற்போதைய நிர்வாக சபையில் இருந்து 4 பேர் இராஜினாமா செய்துள்ளனர். முதலில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் இந்திக்க தேனுவர தனது இராஜினாமா கடிதத்தை அதன் தலைவர் ஶ்ரீ ரங்காவிற்கு அனுப்பியுள்ளார். உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர்களான சி.தீபிகா குமாரி மற்றும் சமன் தில்ஹான் நாகஹவத்த ஆகியோரும் தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். மேலும், உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பொருளாளர் டி.சுதாகரும் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் […]
முதலிடத்துக்கு முன்னேறியமை அதிஷ்டம்

உலக டெனிஸ் தரப்படுத்தலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியமை தமக்கு கிடைத்த அதிஷ்டம் என நொவேக் ஜேகோவிச் தெரிவித்துள்ளார். கடந்த 2022 ஆண்டு தமக்கு போராட்டம் மிகுந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது 2022 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க முடியாது தடுக்கப்பட்டாலும் அவர் இந்த ஆண்டு பட்டம் வென்றமை குறிப்பிடதக்கது.
மரத்தன் ஓட்டப் போட்டியில் கலநந்துக்கொள்வதே எதிர்ப்பார்ப்பு- அநுர

100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஓட மக்கள் விடுதலை முன்னணி ஆயத்தமில்லை எனவும் மாறாக மரத்தன் ஓட்டப் போட்டியில் கலநந்துக்கொள்வதே எதிர்ப்பார்ப்பு எனவும் அந்த கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். தேர்தலை பிற் போடுவதால் வீட்டுக்கு சென்று தூங்குவார்கள் என்று ஜனாதிபதி எண்ணினால் அது அவரின் பரிதாப நிலை எனவும் அவர் விமர்சித்தார்.
நாட்டில் உணவு தட்டுப்பாட்டு வீதம் குறைவடைந்துள்ளது – அமைச்சர் ஜீவன்

மலையக சிறார்களுக்கான சத்துணவு வேலைத்திட்டம் ஆறு மாதங்களுக்கானது எனக் கூறப்பட்டாலும் அதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கே நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்கான திட்டங்கள் நிச்சயம் உருவாக்கப்படும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களுக்கு இலவசமாக சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (01.03.2023) […]
ஜீவன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை இன்று (013) மேற்கொள்கின்றார். பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புது டெல்லியில் நாளை (02) நடைபெறும் (Raisina Dialogue) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்கின்றார். இந்த மாநாட்டை தவிர, மார்ச் 03 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்ள்ள விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 04 ஆம் திகதி வரை அமைச்சர் இந்தியாவில் தங்கவுள்ளார். இந்த இலங்கை குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் […]
மக்களை தவறான திசையில் வழிநடத்தும் எதிர்க் கட்சிகள்- கல்வி இராஜாங்க அமைச்சர்

எதிர்காலம் தொடர்பில் மக்களை சிந்திக்க விடாது தடுக்கும் சில தரப்பினர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் என்ற பெயரில் அப்பாவி மக்களை அசௌகரியப்படுத்தி அவர்களை தவறாக வழிநடத்திக் கொண்டிருப்பது எதிர்காலத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியப்போகிறது. எனவே இவ்விடயத்தில் நாட்டு மக்கள் தெளிவடைய வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோக நிகழ்வானது கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தஇ கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் மற்றும் இலங்கைக்கான சீனத் […]
இரு ரயில்கள் விபத்து…

கிரேக்கத்தின் வட பகுதியில் இரு ரயில்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்திற்குள்ளானதில் குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லரிஸ்ஸா(Larissa) நகருக்கு அருகே நேற்று(28) இந்த விபத்து சம்பவித்துள்ளது. சுமார் 350 பயணிகளுடன் பயணித்த ரயிலொன்று சரக்கு ரயிலொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தினால் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் சுமார் 150 தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதுவொரு நிலநடுக்கம் போன்றது என பயணி […]
SLC

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்க் சபைக்கான தேர்தலை நடத்துவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நேற்று பிற்பகல் நிறைவடைந்துள்ளது. ஸ்ரீ லங்கா கிரிக்கெட்க் சபைக்கான தேர்தல் எதிர்வரும் மே 20 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது. இதன்போது 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுச் செய்யப்படவுள்ளனர்.