மண்ணெண்ணெய் விலை குறையுதாம்?

மண்ணெண்ணெய் விலையை திருத்துவதற்கு இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 305 ரூபாய் ஆகும். அத்துடன் இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 134 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அதன் புதிய விலை 330 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தம் இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது. ஆனால், ஏனைய வகை எரிபொருட்களின் […]
ICC டெஸ்ட் தரவரிசை

ICC டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அவுஸ்திரேலிய அணி 136 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. 123 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. மேற்படி இரு அணிகளும் தற்போது இந்துரில் 3 ஆவது டெஸ்டில் மோதுகின்றன. இந்த பட்டியலில் 64 புள்ளிகளை இலங்கையணி பெற்றுள்ளது. இலங்கையணி தற்போது நியூசிலாந்துக்கு டெஸ்ட் தொடருக்காக சென்றுள்ளது.
அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது

அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காரணம் இது தொடர்பில் அரசாங்கத்திடம் முறையான திட்டம் ஒன்று இல்லை என மக்கள் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் சுற்றுலாதுறையை வலுப்படுத்த எந்தவித திட்டமும் இருக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் தொடர்ச்சியான ஆதரவு

இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அபிவிருத்திக் கொள்கை நடவடிக்கைகளுக்கான சட்டங்களை உருவாக்குவதில் உலக வங்கி தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் என்றும், சர்வதேச ஊடகப் பயன்பாடு மற்றும் நலன்புரி நலன்கள் தொடர்பில் மேலும் வழிகாட்டுதல் மற்றும் தேவையான ஆதரவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான உப தலைவர் மார்ட்டின் ரேசர் (Martin Raiser) உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி […]
கச்சதீவு பெருவிழா

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஊடகங்களுக்கு நேற்று விடுத்த விசேட அறிவிப்பிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் மார்ச் 3 […]
11184 பேர் டெங்கு நோயாளர்கள்

வருடத்தில் மாத்திரம் 11184 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். புத்தளம், கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இந்நாட்களில் அதிக டெங்கு நோயார்கள் பதிவாகுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தின் தெஹிவளை, பிலியந்தலை, இரத்மாலானை, கொத்தட்டுவ, மகரகம போன்ற பிரதேசங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.