பஸ் கட்டணங்களையும் குறைக்குமாறு ஆலோசனை

எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஒரு லீற்றர் டீசலின் விலை 80 ரூபாவால் குறைவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பஸ் கட்டணங்களையும் குறைக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி, தற்போதைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 30 ரூபாவாக குறைவடைய உள்ளதுடன், புதிய பஸ் கட்டணம் அமல்படுத்தப்படும். மேலும், எரிபொருள் விலை திருத்தத்துடன் ஏனைய பஸ் கட்டணங்கள் குறைப்பு தொடர்பான விரிவான தகவல்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் விரைவில் அறிவிக்கப்பட […]

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

அடுத்த வருடம் (2024) கைசாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்த ஒப்பந்தம் குறித்த நான்காம் சுற்று பேச்சுவார்த்தைகள் கொழும்பில் ஆரம்பமாகின. இதன் ஊடாக பாரிய மற்றும் வளர்ந்துவரும் பொருளாதாரத்தை கொண்ட தென்கிழக்காசிய சங்கத்திற்குரித்தான நாடுகளுடன் பொருளாதார உறவுகளை பலப்படுத்திக்கொள்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும். அதற்கமைய, இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்திற்காக தாய்லாந்து சந்தைக்குள் நுழைவதற்கான வாய்ப்புக்களை அதிகரித்துகொள்வது மாத்திரமின்றி, அந்த பொருளாதாரச் சந்தையினூடாக ஏனைய ஆசியான் நாடுகளின் பொருளாதார சந்தைகளுக்கான பிரவேசத்தை அதிகரித்துக்கொள்ளதுடன் தற்போது […]

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மாறுமாம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும். அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும். மேலும் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 465 ரூபாவாகும். ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் […]

West Indies won by 7 runs

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது T20 இல் மேற்கிந்திய தீவுகள் அணி எழு ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி மே.தீவுகள் அணி மூன்று போட்டிகளைக் கொண்ட T20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ஜோஹானஸ்பேக்கில் நடைப்பெற்ற மூன்றாவது T20யில் முதலில் துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்களை பெற்றது. 221 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய தென்னாபிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்களை […]

கனடா மீது குற்றம் சுமத்தி வருகின்ற ஐக்கிய நாடுகள் அமைப்பு

சர்வதேச ரீதியில் மனித உரிமை நிலைமைகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கனடாவிற்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளது. பழங்குடியின மக்களின் உரிமைகளை அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களுக்கு எதிராக அரசாங்கம் பல வழிகளில் ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது. பழங்குடியின மக்களின் காணிகளையும், வளங்களையும் அபகரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. சமத்துவமின்மை மற்றும் ஒடுக்குமுறை என பல நெருக்கடிகளை பழங்குடியின மக்கள் அனுபவித்து வருவதாகத் […]

ஜப்பானில் பறவை காய்ச்சல்….

ஜப்பானின் பல்வேறு மாகாணங்களில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து பறவை காய்ச்சல் பரவி வருகிறது. நாட்டில் உள்ள 47 மாகாணங்களில் 26 மாகாணங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஜப்பானில் பறவை காய்ச்சல் காரணமாக 1 கோடியே 65 லட்சத்துக்கும் அதிகமான கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில்  திருநங்கை  நடத்திய  துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் டென்னிசி மாகாணத்தின் தலைநகர் நாஷ்வில்லேயில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் நேற்று முன்தினம் துப்பாக்கியுடன் நுழைந்த பெண் ஒருவர் மாணவர்கள் மற்றும் ஊழியர்களை சரமாரியாக சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இருப்பினும், இந்த துப்ப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 9 வயதுக்குட்பட்ட 3 மாணவர்கள் உள்பட 6 பேர் பலியாகினர். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து பாடசாலைக்கு விரைந்து சென்ற பொலிஸார் தாக்குதலில் ஈடுபட்ட […]

7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ள டிஸ்னி நிறுவனம்

பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி, தனது நிறுவனத்தில் இருந்து 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாகவும், எதிர்பார்த்த லாப இலக்கை அடைய முடியாதது உள்ளிட்ட காரணங்களாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நிறுவனத்தின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக 7 ஆயிரம் பணி இடங்களை குறைப்பதற்கான கடினமான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம் என […]

இஸ்ரேலில் நடந்த போராட்டத்தின் எதிரொலி

இஸ்ரேலில் நீதித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூ முடிவு செய்துள்ளாதார். இஸ்ரேலில் நடந்த போராட்டத்தின் எதிரொலியாக, நீதித்துறை சீர்திருத்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதை ஒத்திவைப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூ அறிவித்துள்ளார். அதன்படி, உச்சநீதிமன்றத்திற்கான அதிகாரம் குறைக்கப்படும் எனவும், அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் நியமனத்தில் அரசு முடிவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. நீதித்துறையில் அரசு அதிகாரம் செலுத்தக்கூடும் இதனால், நீதித்துறையில் அரசு அதிகாரம் செலுத்தக்கூடும் என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். நாட்டின் ஜனநாயக மாண்புகளை பிரதமர் குலைப்பதாகக் குற்றம்சாட்டி, மக்களும் […]

அதிபராக நான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டால்….?

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளார். அதிபராக நான் மீண்டும்தேர்வு செய்யப்பட்டால், முதற்கட்டாமாக ரஷ்ய அதிபர் புடினையும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியையும் நேரில் வரவழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அமைதி உடன்படிக்கை ஏற்படுத்தி 24 மணி நேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிக்கு டிரம்ப் அளித்த நேர்காணலின் போது […]