தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது T20 இல் மேற்கிந்திய தீவுகள் அணி எழு ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி மே.தீவுகள் அணி மூன்று போட்டிகளைக் கொண்ட T20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
ஜோஹானஸ்பேக்கில் நடைப்பெற்ற மூன்றாவது T20யில் முதலில் துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்களை பெற்றது.
221 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய தென்னாபிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோற்றது.
ஆட்ட நாயகன் விருது அல்ஜாரி ஜோசபுக்கு (Alzarri Joseph) அளிக்கப்பட்டது.
தொடர் நாயகனாக ஜான்சன் சார்லஸ் (Johnson Charles) அறிவிக்கப்பட்டார்.