வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின் பணி புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது

நிர்வாகம் வழங்கிய உறுதிமொழியைடுத்து வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின் பணி புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. சம்பள அதிகரிப்பு, போனஸ் கொடுப்பனவு உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் ஊழியர்கள் கடந்த சில நாட்களாக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு போனஸ் வழங்குவதற்கு நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது, அது வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் இ.தொ.காவின் […]
நலன்புரி விண்ணப்பங்கள் தகவல் சரிபார்ப்பு

நலன்புரி கொடுப்பனவுகளுக்குத் தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தில், தற்போது நடைபெற்று வரும் தகவல் கணக்கெடுப்பு மற்றும் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கை மூலம் பெறப்பட்ட 22 இலட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. நாடளாவிய ரீதியில் 340 பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து பெறப்பட்ட 37 இலட்சம் விண்ணப்பங்களில் நலன்புரி கொடுப்பனவுகளுக்கான தகுதி சரிபார்ப்புகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களில் […]
லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி

லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார் என்று வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். வீரபிட்டிய, மொரகஹாபள்ளம பிரதேசத்தைச் சேர்ந்த பிரதிப் குமார அஸ்விஸ் (வயது – 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குளியாப்பிட்டிய பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்துகொண்டிருந்த ‘கள்’ லொறியும், ஹட்டனில் இருந்து கினிகத்தேன நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுமே விபத்துக்குள்ளாகியுள்ளன. ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, தியகல பகுதியில் வைத்தே இன்று பிற்பகல் 3.30 […]
இலங்கை அணிக்கு 20% அபராதம்

இலங்கை அணிக்கு போட்டி கட்டணத்தில் 20 /% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசியதால் ICC இந்த அபராதத்தை விதித்துள்ளது. இதனிடையே, இலங்கை அணித் தலைவர் தசுன் ஷனக்க குற்றச்சாட்டு தொடர்பான குற்றத்தை ஏற்றுக்கொள்வதால், குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை நீதிபதிகள் மேற்கொள்ள மாட்டார்கள் என ICC தெரிவித்துள்ளது.
“அனைவரும் சீனர்கள்”

எல்லையின் இருபுறமும் வசிக்கும் அனைவரும் சீன இனத்தவர்கள் என்றும் அவர்கள் ஒரே மூதாதையர்கள் எனவும் தைவானின் முன்னாள் ஜனாதிபதி மா யிங்-ஜியோ கூறியுள்ளார். சீன விஜயத்தின் ஆரம்பத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.
ஐ.நா சனத்தொகை நிதியம் பாராட்டு

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கையை அங்கீகரிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பை ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) பாராட்டியுள்ளது. ஜனாதிபதியின் இந்த அர்ப்பணிப்பு, இலங்கையில் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம், உரிமைகள் ஆகியவற்றை உறுதி செய்வதில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக அந்த நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் மதிப்பீட்டு அலுவலகப் பணிப்பாளர் மார்கோ செகோன் உள்ளிட்ட பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (27) […]
காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள்

காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் 9 பேர் புதைமணலில் இருந்து மீட்கப்பட்டனர். அங்கு தொடர்ந்து கனமழை நீடித்து வந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்க இடிபாடுகளில் சில தொழிலாளர்கள் சிக்கினர். இந்நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்றது, அப்போது மணலில் சிக்கி இருந்தவர்கள் 9 பேர் அடுத்தடுத்து மணல் புதையலில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறினர்.
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் உதயமாகியது

நுவரெலியா கல்வி வலயம் கோட்டம் இரண்டைச் சேர்ந்த சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழையமாணவ சங்கத்தின் அங்குரார்ப்பனம் கூட்டமும் , சங்க உருவாக்கமும் அதிபரின் ஆலோசனைக்கமைய நாடு தழுவிய ரீதியில் பழையமாணவர்கள் ஒன்றிணைக்கப்பட்டு நடாத்தப்பட்டது. இதன்போது தலைவராக அதிபர் V. தினகரன்,உப தலைவராக ஜெகநாதன்,செயலாளராக திருமதி சுதாஜினி ,உப செயலாளராக திரு சதீஷ்,பொருளாளராக திரு லோரன்ஸ் இவர்களுடன் இணைந்து செயல்பட இன்னும் 12 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இக்குழுவின் ஊடாக எதிர்காலத்தில் பழையமாணவர்களை ஒன்றிணைத்தல்,பாடசாலையில் உள்ள சுகாதார குறைபாடுகளை […]
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது பதிவு செயலிழக்கும்

தொடர்ச்சியாக ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா நிலையில் இருந்து வரும் முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களின் (முன்பள்ளி) உத்தியோகபூர்வ பதிவுகள் இயல்பாகவே செயலிழக்கும் நிலையை அடைவதாக தெரிவித்துள்ள கல்வி ராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார், அவ்வாறான முன் பள்ளிகள் அல்லது புதிதாக நிறுவப்பட உள்ள முன்பள்ளிகளை பதிவு செய்து கொள்ளும் பொருட்டு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்பதாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டை பிடித்திருந்த கொவிட் […]
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும் வழங்கப்படுதல் அவசியம்

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற குறைந்த வருமானம் பெறும் 29 லட்சம் மக்களுக்கான அரிசி நிவாரணத்தில் கட்டாயமாக பெருந்தோட்ட மலையக மக்களும் உள்வாங்கப்பட வேண்டியது அவசியமாகும். இலங்கை நாட்டிலே உழைப்புக்கேற்ற ஊதியம் பெறப்படாமல் குறைந்த வருமானம் பெறுவது பெருந்தோட்ட மக்களே ஆகவே பெருந்தோட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அவர்களிடமும் அரசாங்கத்திடமும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளேன் என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.