தென்னாபிரிக்கா சாதனை வெற்றி

தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற T20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி சாதனை வெற்றியை பதிவு செய்தது. T20 போட்டியொன்றில் அதிகூடிய ஓட்டங்களை துரத்தி வெற்றிப் பெற்று தென்னாபிரிக்கா அணி இந்த சாதனையை புரிந்துள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பில் ஜொன்சன் சார்லஸ் அதிகப்பட்சமாக 118 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் […]

ஜூபிடஸ் வெற்றி

(அந்துவன்) கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவலப்பிட்டி கெட்டபுலா தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி பாடசாலை மைதானத்தில் அதிபரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் கொத்மலை வலய கல்விப்பனிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் அதிபர்கள், மற்றும் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதேச […]

வாழும் காலத்தில் வாழ்த்துவோம்

(அந்துவன்) “வாழும் காலத்தில் வாழ்த்துவோம்” எனும் தொனியில் தனது 90 வது அகவையில் கால்பதித்து கொண்டாடும் மலையகத்தின் மூத்த கல்விமான், ஆசிரியர் சிகரம் பிலீப் இராமையா அவர்களை கௌரவித்து இராகலை உயர் நிலை பாடசாலையில் விழா நடைபெற்றது. விழா ஏற்பாட்டாளர் சட்டத்தரணி எஸ்.தாயுமானவன் தலைமையில்  இடம்பெற்ற  இந்த விழாவில் ஆசிரிய சிகரம் பிலீப் இராமையா குறித்த சாரல் துளிகள் நினைவு எனும் பதிவுகள், ஆக்கங்கள், அடங்கிய 333 பக்கங்களை கொண்ட மலர் வெளியீடு மிக விமர்சையாக இடம்பெற்றது. […]

நாட்டை மேம்படுத்துவதற்கு அழைப்பு

இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  நம்பிக்கை தெரிவித்தார். மேற்படி, 25 வருடகால புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் இலக்குகளை நோக்கி அரசாங்கம் நாட்டை கொண்டுச் செல்லும் என எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை முன்னேற்றுவதற்கான தொடர்ச்சியான வேலைத்திட்டங்களில் இணைந்துகொள்ளுமாறு புலம்பெயர் மற்றும் இந்நாட்டின் இளம் சமுதாயத்தினருக்கு அழைப்பு விடுத்தார். ஹார்வட் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த […]

கோழிகளை அழிக்கும் ஜப்பான்…

ஜப்பானின் அமோரி மாகாணத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் ஒரு பண்ணையில் உள்ள கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த பண்ணை மற்றும் அதிலுள்ள உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், அதனை சுற்றிலும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரையில் உள்ள பகுதிகளில் கோழிகளையும் முட்டைகளையும் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பறவைக்காய்ச்சல் அதிவேகமாக பரவி வருவதால், நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள கோழிகளை பாதுகாப்பதற்காக குறித்த பண்ணையில் உள்ள சுமார் 3,30,000 […]

விளையாட்டுத்துறையின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான நிபுணர்கள் குழு (PHOTS)

விளையாட்டுத்துறையின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான நிபுணர்கள் குழுவொன்றினை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கினார். விளையாட்டு, கல்வி அமைச்சர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உட்பட பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களின் பங்கேற்புடன் கூடியதாக மேற்படி குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டுத் தொகுதியைப் பார்வையிட இன்று (25) மேற்கொண்டிருந்த கண்காணிப்பு விஜயத்தின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு […]

New Zealand won by 198 runs

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் (ODI) போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷனக்க முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதனடிப்படையில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களை இழந்து 274 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்ப்பில் பின் ஆலன் 51 ஓட்டங்களையும், ரச்சின் ரவீந்திரன் 49 ஓட்டங்களையும், […]

காலநிலை அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்யவில்லையெனில் நிலையான பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியாது- சாகல (PHOTOS)

காலநிலை அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்யவில்லையெனில் நிலையான பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைவது சாத்தியமற்றது என என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார் கொழும்பு LEO கழகம் ஏற்பாடு செய்திருந்த 10,000 மரக் கன்றுகளை நடும் வேலைத்திட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  

சர்வதேசத்தின் நன்மதிப்பு கிடைத்துள்ளது

இலங்கைக்கு IMF உதவி கிடைத்ததன் மூலம் சர்வதேசத்தின் நன்மதிப்பு கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார. பாராளுமன்றத்தில் நேற்று (24) ஆற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றியய கல்வி இராஜாங்க அமைச்சர்… (இலங்கைக்கு IMF உதவி செய்யாது என தெரிவித்து எம்மை அதிர்ப்தி அடைய செய்தார்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சோர்ந்து போகாது பகிரத முயற்சி எடுத்தார். IMF அங்கிகாரத்தின் ஊடாக இலங்கைக்கு சர்வதேச அங்கிகாரம் […]

மக்களை தவறாக வழிநடத்துவதற்கு முற்படக்கூடாது – அமைச்சர் ஜீவன்

பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றம் இன்று (24.03.2023) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. பிரதான சபை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், சர்வதேச நாணய நிதியம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான 2 ஆம் நாள் விவாதம் ஆரம்பமானது. […]