இலங்கைக்கு IMF உதவி கிடைத்ததன் மூலம் சர்வதேசத்தின் நன்மதிப்பு கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார.

பாராளுமன்றத்தில் நேற்று (24) ஆற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றியய கல்வி இராஜாங்க அமைச்சர்…

(இலங்கைக்கு IMF உதவி செய்யாது என தெரிவித்து எம்மை அதிர்ப்தி அடைய செய்தார்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சோர்ந்து போகாது பகிரத முயற்சி எடுத்தார்.

IMF அங்கிகாரத்தின் ஊடாக இலங்கைக்கு சர்வதேச அங்கிகாரம் கிடைத்துள்ளது. ஏனைய நாடுகளும் மலமலவென்று உதவி செய்ய முன்வருவதை காண முடிகின்றது.

இதன் மூலம் சரவதேச ரீதியாக நம்பிகை கிடைத்துள்ளமை முக்கியமானது. ஆகவே இந்த அங்கிகாரம் எம்மை பலப்படுத்தியுள்ளது. தற்போது வரி விதிப்புக்கு எதிரான போராட்டம் நடத்தப்படுகின்றது

இதற்கு பின் அரசியல் இருக்கின்றது. ஆகவே தமது நன்மைக்காக மக்களை துண்டி விடுவது எந்த வகையிலும் நன்மையாகது.கொவிட் காலத்திலும் மலையக மக்கள் அந்நிய செலாவணியை ஈட்டி கொடுத்தனர்.

இப்போதும் எம்மவர்களின் உழைப்பு பெறுமதியானது. நாடு முன்னேற வேண்டுமாயின் ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதியை குறைப்பது அவசியம்) என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *