இலங்கை பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து வருகின்றது – IMF

இலங்கை பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து வருவதாக IMF பிரதிப் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார். இலங்கை அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மிக்க பணி இதற்கு காரணமாகியுள்ளதாக IMF பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கென்ஜி ஒகமுரா இலங்கை விஜயத்தை அடுத்து இதனை தெரிவித்துள்ளார். எனினும் பொருளாதார மறு சீரமைப்பு நடவடிக்கை தொடர்ந்தும் அவசியம் எனவும் கென்ஜி ஒகமுரா தெரிவித்துள்ளார். கென்ஜி ஒகமுரா இலங்கையில் ஜனாதிபததி, மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி […]

ஒருபோதும் அமைச்சுப் பதவியைக் கேட்டதில்லை

தாம் ஒருபோதும் அமைச்சுப் பதவியைக் கேட்டதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். தனது சேவை நாட்டுக்கு தேவை என தெரிவித்தால் தயங்காமல் வழங்குவேன் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இடறி விழுந்த பைடன்

அமெரிக்காவின் கொலரோடா மாகாணத்தில் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடந்தது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்க வந்தார். அவரை பேச நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்தனர். உடனே பேச எழுந்த பைடன் கால் இடறி கீழே விழுந்தார். உடனே அருகிலிருந்த விமானப்படை வீரர்கள் அவரை கைத்தாங்கலாக தூக்கினர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறன. அதன்பின், அதிகாரிகளின் உதவி ஏதுமின்றி, அவர் நடந்து சென்று தமது இருக்கையில் அமர்ந்தார். இந்த […]

டோனிக்கு அறுவை சிகிச்சை வெற்றி

எம்.எஸ்.டோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக டோனி மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாத்தறை, இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார். இதன்படி, மாத்தறை மாவட்டம், பிடபெத்தர, குறிப்பாக களுபோவிட்டான பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, காலி மாவட்டத்தின் நாகொட மற்றும் நெலுவ பிரதேச மக்களுக்கும் […]

இலங்கை – ஆப்கானிஸ்தான் முதல் ODI இன்று, மதீஷவுக்கு வாய்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (02) ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை இன்றைய போட்டியில் IPLலில் கலக்கிய வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்படும் என இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இலக்கு

இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2048ஆம் ஆண்டு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதே தமது போராட்டமாகும் என்றும் தெரிவித்தார். “தேசிய நிலைமாற்றத்திற்கான திட்டவரைபடத்தை” நாட்டுக்கு முன்வைத்து விசேட உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக கடந்த 09 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு […]