2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக தகவல் – பிரதமர் ரிஷி சுனக்

பிரித்தானியாவில் பொது தேர்தலுக்கு முன்னர் பிரதமர் ரிஷி சுனக் 2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.டெலிகிராப் பத்திரிக்கை இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. 2024ல் பொது தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இந்த முக்கிய முடிவை எடுக்க ரிஷி சுனக் நினைப்பதாக கூறப்பட்டுள்ளது.பிரித்தானியாவின் உயர் பணவீக்க விகிதத்தில் எதிர்பார்த்ததை விட மெதுவான வீழ்ச்சி, வரிக் குறைப்பைத் தடுக்காது என்று அரசாங்க அதிகாரிகள் நம்புவதாக டெலிபிராப் தெரிவித்துள்ள போதிலும் அதன் ஆதாரங்களை மேற்கோள் காட்டவில்லை. […]

5.5 பில்லியன் டொலர் செலவைக் குறைக்கும் திட்டம் – அனிமேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம்

உலகின் மிகவும் பிரபலமான மற்றும் அனிமேஷனில் கொடிகட்டி பறக்கின்ற நிறுவனமான த வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தங்களது நிருவனத்திலுள்ள நிர்வாகிகள் உட்பட 75 பதவிக்குறியவர்களை பதவி நீக்கம் செய்துள்ளது. கடந்த ஆண்டு வெளிவந்த ‘லைட்இயர்’ என்ற அனிமேஷன் திரைப்படத்தின் வசூல் ரீதியான படுதோல்வியை முன்னிட்டே இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளது. ‘டாய் ஸ்டோரி 4’ மற்றும் ‘கோகோ’ போன்ற புகழ்பெற்ற திரைப்பட அனிமேஸன் குழுவின், ஒரு பகுதியாக இருந்த 26 ஆண்டுகால அனிமேட்டரே ‘லைட்இயர்’ திரைப்படத்தையும் […]

ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு -உக்ரைன் ஜனாதிபதி

ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு என்று விமர்சித்து தனது கடும் கண்டனத்தை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் உக்ரைனின் மத்திய நகரமான டினிப்ரோவில் ரஷ்ய விமானப்படை தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்தமை தொடர்பில் தனது டெலிகிராம் பதிவில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும், டினிப்ரோ நகரின் பிராந்திய ஆளுநர் Serhiy Lysak தாக்குதலைத் தொடர்ந்து நிலைமைகள் குறித்து கருத்து வெளியிட்ட போது, “3 […]

ரயில் தடம் புரண்டது எப்படி?

ஒடிசா மாநிலம் பாலசோரில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தததாக தலைமைச் செயலாளர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 1 175 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தலைமை செயலாளர் கூறினார். ரயில் விபத்து நடந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியதால் இந்த பேரிழிவு ஏற்பட்டிருக்கிறது. […]

கனடிய வரலாற்றில் வென்றெடுக்கப்படாத மிகப் பெரிய பரிசுத் தொகை

கனடாவில் 70 மில்லியன் டொலர் பணப் பரிசுத் தொகையை பலரும் உரிமை கோரத் தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு லொத்தர் சீட்டிலுப்பில் வென்றெடுக்கப்பட்ட இந்த பரிசுத் தொகை இதுவரையில் உரிமை கோரப்படவில்லை.இந்த மாதம் 28ம் திகதி லொத்தர் சீட்டு காலாவதியாக உள்ளது. இந்த லொத்தர் சீட்டு தங்களுடையதாக இருக்கக் கூடும் எனக் கூறி சுமார் 760 பேர் தொலைபேசி அழைப்புக்களை எடுத்துள்ளனர். கனடிய வரலாற்றில் மிகப் பெரிய தொகை பரிசுப் பணம் வென்றெடுக்கப்படாத சந்தர்ப்பம் இதுவாக பதிவாகலாம் என […]

கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11 பேர்

கனடாவில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு பாடசாலை மாணவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். கனடாவின் கியூபெக் மாகாணத்தின் சென் லோரன்ஸ் நதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சிறுவர்களே இந்த கோர விபத்தில் சிக்கியுள்ளனர். மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் ஆறு பேர் மீட்கப்பட்டதாகவும் ஐந்து பேர் காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பத்து வயதுக்கும் மேற்பட்ட சிறுவர்களே சம்பவத்தில் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு காணாமல் போயிருந்த சிறுவர்களில் நான்கு பேரை மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர். எனினும் அந்த […]

ஐஸ் கிரீம் தன்சல்

 மஹிந்த தேரரின் இலங்கை வருகையை நினைவு கூறும் முகமாக ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐஸ்கிரீம் தன்சல் நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மக்களுக்கு ஐஸ்கிரீம் வழங்கி தன்சல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரியவும் கலந்துகொண்டார்.

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும்

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற விடயங்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நுவரெலியா கிரேண்ட ஹோட்டலில் நேற்று (03) நடைபெற்ற சட்டத்தரணி கள் மாநாட்டின் 2 ஆம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் […]

இலங்கையணி வெற்றியை ருசித்தது

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டியில் இலங்கையணி 132 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 323 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் 78 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். துமித் கருணாரத்ன 52 ஓட்டங்களையும், சதீர சமரவிக்கிரம 33 ஓட்டங்களையும் மற்றும் […]

ஆஷஸ் தொடர் – இங்கிலாந்து அணி அறிவிப்பு

ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், தற்போது முதல் இரண்டு போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 16ம் திகதி இந்த தொடர் துவங்க உள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடர் வரும் ஜூலை 31 திகதி நிறைவடைகிறது. ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இங்கிலாந்து வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், ஜாக் கிராலி, பென் […]