இந்திய ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்…

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசா ரயில் விபத்து நடந்து 36 மணிநேரம் ஆனநிலையில் விபத்து நடந்த இடத்தில் உள்ள ரயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள், சரக்கு ரயில் பெட்டிகள் என அனைத்து ரயில் […]

இலங்கை அணியில் சில மாற்றங்கள்…

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த போட்டியில் இலங்கை அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. காயமடைந்த லஹிரு குமாரவுக்கு பதிலாக […]

இந்தியாவுடன் நிற்போம் – ஜனாதிபதி இரங்கல்

இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் கேள்வியுற்று மிகுந்த கவலை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் துயரமான இந்த தருணத்தில் அயல் நாட்டவர்கள் என்ற வகையில் இலங்கை அரசாங்கமும் மக்களும் இந்தியாவுடன் கைகோர்த்து நிற்போம் எனவும் உறுதியளித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதேநேரம் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி ரணில் […]