நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலய மஹோட்சவ கொடியேற்றம்!
( வாஸ் கூஞ்ஞ) 17.08.2023மன்னார் நானாடடன் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலயத்தில் வருவடாந்த மஹோட்சவத் திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வும் அமைக்கப்பட்ட அலங்கார வளைவு திறப்பு விழாவும் புதன்கிழமை (16) காலை 10 மணியளவில் ஆலயத்தின் திருவிழா பிரதம குரு சி.ஸ்ரீ சண்முகநாதக் குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்வில் ஏராளமான அம்பிகையின் பக்தர்கள் கலநது கொண்டார்கள் வழமையாக 10 நாட்கள் கொண்ட மஹோட்சவத் திருவிழாவானது இம்முறை 15 […]
பாலத்தை புனரமைக்குமாறு மக்கள் அவசரக் கோரிக்கை.
(இப்னு ஷெரீப்) எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையிலுள்ள சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதியிலுள்ள ஒடுக்கமான பாலத்தை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கல்முனை மாநகர சபைப் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தின் மிகவும் பழைமை வய்ந்த இப்பாலம் பல தசாப்தங்களாகியும் இதுவரை எந்தவிதமான புனரமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் காணப்படுவதுடன் சாதாரண மற்றும் கனரக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாதளவு பழுதடைந்துள்ளது. இப்பிரதேசத்தின் அதிகளவான பயன்பாட்டிற்குரிய வீதிகளுள் ஒன்றாகக் கருதப்படும் இவ்வீதியின் பாலம் இரண்டு […]
மருதமடு பெருவிழாவில் மூன்று பக்தர்கள் திடீர் மரணம்!
( வாஸ் கூஞ்ஞ) மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள உலக பகழ்பெற்ற மருதமடு அன்னையின் ஆவணி மாத (15) பெருவிழாவில் சுமார் ஆறு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதில் மூன்று நபர்கள் திடீர் மரணத்துக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. மன்னார் மருதமடு ஆவணி மாத பெருவிழாவில் நீண்டகாலத்துக்குப் பின் இம்முறை பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்டவர்களில் மூன்று நபர்கள் மடு ஆலயப் பகுதியில் திடீர் மரணத்தை தழுவிக் கொண்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. […]
தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்ப்பதை போன்று நடைமுறை பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு அவசியம்! அமைச்சர் டக்ளஸ்
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளையும், பரிந்துரைகளையும் வரவேற்றுள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த முன்னெடுப்புக்கள் அர்த்தபூர்வமானவையாக அமைய வேண்டுமாயின் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக விரைவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் அமுல்ப்படுத்தல் தொடர்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்ப்பாக நேற்று(16.08.2023) ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளிலேயே குறித்த […]
மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக உதவ ஜப்பான் உறுதி!
மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), உறுதியளித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமானைஜப்பான் தூதுவர் மற்றும் JICA நிறுவனத்தின் பிரதிநிதிகள் இன்று சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர் அமைச்சர் ஜீவனின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் தொடர்பாக அவரது […]
கனடாவில் உயிரை மாய்த்த யாழ் இளைஞன்
கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் வடமராட்சி வல்வெட்டிதுறை தீருவில் பகுதியைச் சேர்ந்த ரகுபதி ஆனந்த் (31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் 16 வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளார். அதேசமயம் இளைஞர் மேலிருந்து விழும் போது இன்னொருவர் மீது மோதுண்டமையினால் அவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் மேம்பிள் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
கனடாவில் அதிகரித்த மளிகைப் பொருள் விலை
கனடாவில் மளிகைப் பொருட்களுக்கான விலைகள் தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓராண்டு கால இடைவெளியில் கடந்த ஜூலை மாதம் மளிகைப் பொருட்களின் விலை 8.5 வீதமாக உயர்வடைந்துள்ளது. இந்த தகவல்களை கனடாவின் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. பேக்கரி உற்பத்திப் பொருட்கள், பழங்கள் உள்ளிட்டனவற்றின் விலை உயர்வினால் இவ்வாறு மளிகைப் பொருட்களின் சராசரி விலை உயர்வடைந்துள்ளது. இதேவேளை, பணவீக்க வீதம் கடந்த ஜூலை மாதம் 3.3 வீதமாக பதிவாகியுள்ளது. எதிர்வரும் ஆண்டு முழுவதிலும் பணவீக்க வீதம் சராசரியாக மூன்று […]
ரொறன்ரோ பெருநகர் வீட்டு விற்பனை பின்னடைவு
கனடாவில் வீடு விற்பனைகளில் சாதகமான மாற்றம் பதிவாகியுள்ளதாக ரியல்எஸ்டேட் நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. வீட்டு விற்பனை அதிகரித்துள்ளதாக கனடிய ரியல் எஸ்டே; ஒன்றியம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் கூடுதல் அளவில் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூன் மாதத்தை விடவும் ஜூலை மாத வீட்டு விற்பனை 8.7 வீதத்தினால் அதிகரித்துள்ளது. எனினும், ரொறன்ரோ பெருநகர பகுதியில் வீட்டு விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூலை மாதம் சராசரியாக வீடு ஒன்றின் விலை 668754 […]
அனுபவம் வாய்ந்த பைலட் மறைவு – விமான நிறுவனம் இரங்கல்
மியாமியில் இருந்து சிலி நோக்கி 271 பயணிகளுடன் லாதம் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது பைலட் இவான் ஆண்ட்ரூவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பாத்ரூமுக்கு சென்ற அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து விமானம் உடனடியாக பனாமா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் விமான நிலைய மருத்துவக் குழுவினர் வந்து பைலட்டை பரிசோதனை செய்தனர். அவருக்கு உயிர்காக்கும் கருவிகளுடன் […]
சுற்றுலாவாசிகளின் சொர்க்கபுரியாக திகழ்ந்த ஹவாய்……
அமெரிக்காவின் ஹவாய் தீவில் பரவிய தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனால் பெரும்பாலான வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ள நிலையில் 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் தீயில் கருகியுள்ளன. குறித்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1300-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவாசிகளின் சொர்க்கபுரியாக திகழ்ந்த ஹவாய் தீவு இன்று காட்டுத்தீயினால் உருக்குலைந்துபோயுள்ளது.