பசறை 13 ஆம் கட்டையில் வயோதிபரின் சடலம் மீட்பு!
ராமு தனராஜா பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 13 ஆம் கட்டை லுணுபிஸ்ஸபதன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (27 ஆம் திகதி) மாலை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வீட்டில் தனியாக வசித்து வந்த 71 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். நபர் ஒருவரின் வீட்டுக்கு நீர் வராததால் மரணித்த நபரின் வீட்டுக்கு மேலே உள்ள நீர் ஊற்றில் இருந்து வரும் நீர் குழாயை திருத்துவதற்கு சென்ற […]
கூடைப்பந்தாட்டப்போட்டியில் கார்மேலியன்ஸ் சம்பியன்களானது.
(அஸ்ஹர் இப்றாஹிம்) கல்முனை வடக்கு பிரதேச செயலக இளைஞர் கழக விளையாட்டுப்போட்டியின் கூடைப்பந்தாட்டப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மைதானத்தில் மைதானத்தில் இடம்பெற்றது. இவ்வாண்டுக்கான 34வது இளைஞர் கழக விளையாட்டு விழாவின் கூடைப்பந்தாட்டபோட்டியில் ஆண், பெண் பிரிவுகளில் கார்மேலியன்ஸ் இளைஞர் கழகம் சம்பியன்களானது.
மட்டக்களப்பில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ! ஒருவர் காயம்
சஷி புண்ணியமூர்த்தி மட்டக்களப்பு புதூர் சேத்துக்குடா பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அணுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதது. இரு குழுக்களுக்கு இடையே நடந்த மோதல்கள் காரணமாக குறித்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். கடந் சில காலமாக இருகுழுக்ககளுக்கும் இடையில் பலதடவை மோதல்கள் ஏற்ப்பட்டுள்ளதாகவும் அதன் பிரதிபலனாக இன்று இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்கான நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளமை […]
யாழில் ஒரே சூலில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய்!
யாழ்.வைத்தியசாலையில் பெண்ணொருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளைகள் பிறந்துள்ளன. இன்று (27_08_2023) யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் (Sritharan Apputhurai) Sir அவர்கள் தலைமையிலான மருந்துவக் குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினால் குறித்த மூன்று குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர்.
ஸ்பீடாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவரும் , நம்பி பின்னால் அமர்ந்த யுவதியும் டிக்கோயா வைத்தியசாலையில்!
அதிக வேகத்துடன் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இளைஞர் ஒருவரும், யுவதியும் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்பு ஸ்டிதரன் தோட்டப் பகுதியிலேயே இன்று மாலை 4 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. ஹட்டனில் இருந்து கொட்டகலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த மோட்டார் சைக்கிள், அதிக வேகத்தால் சறுக்கி சென்று, ‘காட் கல்லில்’ மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த இருவரும் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என பொலிஸார் […]
விறகு தேடி சென்ற சென் கூம்ஸ் தோட்டத்து இளைஞன் பிணமாக வீடு திரும்பினார்!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வோல்ட்றீம் தோட்டத்தில் காட்டுக்கு விறகுதேடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். தலவாக்கலை, கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீரேந்திச்செல்லும் எல்ஜின் ஓயாவில் மூழ்கியே அவர் உயிரிழந்துள்ளார். இன்று இடம்பெற்ற அவ்வனர்த்தத்தில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் கூம்ஸ் தோட்டத்தில் கீழ் பிரிவைச் சேர்ந்த 20 வயதுடைய பிரபாகரன் கஜேந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த தோட்டத்தில் உள்ள மேலும் இரு இளைஞர்களுடன் இணைந்து இவர் விறகு தேடச்சென்றுள்ளார். அவ்வேளையில் எல்ஜின் ஓயாவில் சிலர் குளித்துக்கொண்டிருந்துள்ளனர். […]
“ஜெயிலரை தாக்கிய கைதி” ! பல்லேகல சிறைச்சாலையில் சம்பவம்!
அஸ்ரப் அலீ பல்லேகெல சிறைச்சாலையில் கைதியொருவரின் தாக்குதல் காரணமாக ஜெயிலர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் பல்லேகெல சிறைச்சாலையின் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய விசேட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கட்டிடத்தில் சட்டவிரோத மொபைல் போன் பயன்படுத்தப்படுவதாக சிறைச்சாலை ஒழுக்காற்றுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது அதன் பிரகாரம் சோதனை மேற்கொள்ளப்பட்டு மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கைதிகள் ஒன்று திரண்டு சிறைச்சாலை ஊழியர்களை தாக்கியுள்ளனர். அதன் போது ஒரு கைதியின் தாக்குதல் காரணமாக ஜெயிலர் ஒருவர் காயமுற்று சிறைச்சாலை […]
இனவாத சூறாவளி சுழன்றடித்தாலும் தமிழர்களை ஒழிக்க முடியாது -கனடாவில் மனோ கணேசன்
படங்கள் கிருபா பிள்ளை இலங்கையில் வட மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும், மலையகத்திலும், நாடு முழுக்கவும் யுத்தம் இல்லை. ஆனால் இனவாதம் இருக்கிறது என கனடா டொரென்டோவில் நிகழ்ந்த தமிழர் தெருத்திருவிழாவில் உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறினார். தற்சமயம் கனடா டொரோண நகருக்கு விஜயம் செய்திருக்குமு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மேலும் கூறியதாவது: இனவாத சூறாவளி சுழன்றடித்தாலும், சுற்றி சுற்றி அடித்தாலும், சுனாமியாக அடித்தாலும் […]
மலையகம் 200 வருட வரலாறு நூல் வெளியீடு விழா
( நூரளை பி. எஸ். மணியம்) இந்தியவம்சாவளி மக்கள் மலையகத்தில் குடியேரி 200 வருடங்கள் கடந்திருக்கும் இவ் வேளையில் “மலையகம் 200” ஆண்டு கால வரலாற்றை நினைவு கூறும் முகமாக “தேயிலை கொழுந்தின் தொலை நோக்கு பார்வை” என்ற தலைப்பின் கீழ் தேயிலை தோட்ட வரலாறு மற்றும் தொழிற்சங்க வளர்ச்சி தொடர்பான ஆய்வு கட்டுரை ஒன்றை கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக இயக்குனரும் சட்டத்தரணியுமான ஏ. பி. கணபதிபிள்ளை புத்தகமாக நுவரெலியாவில் வெளியிட்டு வைத்தார். நுவரெலியா கொல்ப் கழக […]
நுவரெலியா மாவட்ட பெண்களுக்கு சுயத்தொழில் திட்டம்!
( நூரளை பி. எஸ். மணியம்) கொரியா நாட்டின் “செமாவுல்” அறக்கட்டளை அமைப்பின் ஊடாக நுவரெலியா மாவட்ட செயலகம் இணைந்து சுயத்தொழிலில் பெண்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஆரம்பக்கட்ட நிகழ்வு நுவரெலியா சாந்திபுர,கலாபுர மற்றும் பம்பரக்கலை கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பெண்கள் கிராமத் திட்டத்தின் கீழ் கொரியா நாட்டின் “கியாசாங்புக்டோ” மாநில அரசு மற்றும் “செமாவுல்” அமைப்பின் ஆதரவுடன் இவ் அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள பெண்கள் சுயத்தொழிலில் நிலையான அபிவிருத்தி வளர்ச்சியை அடைய வேண்டும். என்ற அடிப்படையில் இத் […]