சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய – எழுந்து நடக்க முடியாத நபர்
கனடாவில் 86 வயதுடைய நபரொருவர் எழுந்து நடக்க முடியாத நிலையிலும் 4 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றியதால், இன்று அவரை கனேடிய மக்கள் ஹீரோ என புகழ்ந்து வருகின்றனர். குறித்த நபருக்கு இரண்டு முழங்கால்களிலும் அறுவை சிகிச்சை, இரண்டு முறை இடுப்பெலும்பு அறுவை சிகிச்சை, புற்றுநோய், மாரடைப்பு உள்ளது. ஆனாலும் அவர் குறித்த குழந்தையை பல முயற்சிக்கு பிறகு காப்பாற்றியுள்ளார். கனடா – எட்மண்டனில் வாழ்ந்துவரும் 86 வயதான பிரெட் வாசிலிஷின், தனது மோட்டார் சைக்கிள் உதவியுடன் […]
காத்தான்குடி பூர்வீக நூதனசாலை திருத்த பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுகிறது!
செப்டம்பர் 4 2023 முதல் செப்டம்பர் 14 2023 வரை திருத்தபணிகள் நடைப்பெறும் பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி புராதன நூதனசாலையின் நிலைமை தற்போது உரிய பராமரிப்பின்றி குப்பைகள் தேங்கிக் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இப்பூர்வீக நூதனசாலைக்கு அன்றாடம் பெரும் எண்ணிக்கையிலான உள்ளூர், வெளியூர் மக்கள் பார்வையிட்டுள்ளனர். இப்பிரமாண்டமான நூதனசாலை 90% முஸ்லீம் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவே அமைகிறதுடன், குறித்த நூதனசாலையைப் பார்வையிடுவதற்கு […]
சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய பரிபாலன சபையின் தலைவராக மீண்டும் இராதாகிருஸ்ணன்!!
( நூரளை பி. எஸ். மணியம்) நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய பரிபாலன சபை தலைவராக மீண்டும் இராதாகிருஷ்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய பரிபாலன சபையின் 51 ஆவது பொதுச்சபை கூட்டம் நேற்று முன் தினம் நேற்று (30) புதன்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கலாச்சார மண்டபத்தில், நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ […]
தென்ஆப்பிரிக்காவில் ஐந்து மாடி கட்டிடத்தில் தீ விபத்து
தென்ஆப்பிரிக்காவின் முக்கிய வணிக மாவட்டமாக கருதப்படுவது ஜோகன்னஸ்பர்க். தென்ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான இங்குள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஐந்து மாடிகளைக் கொண்ட மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் 43 பேர் காயமடைந்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. நள்ளிரவு 1.30 மணிக்கு தீயணைப்புத்துறையினருக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இன்று […]
“தினமலர்” பத்திரிகை தலைப்பால் தின’மலமா’கிய நிலை! முதல்வர் கடும் கண்டனம்!
தினமலர் பத்திரிகையில் “மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு , கக்கூஸ் நிரம்பி வழிகிறது ” என்ற தலைப்பை பத்திரிகையின் தலைப்பு செய்தியாக வெளியிட்டதை அண்ணாச்சி செய்தி சேவை வன்மையாக கண்டிக்கிறது. ஊடக அறத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் ஊடக மாப்பியாக்களாக செயற்பட கூடாது . தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு பாடசாலை நடுநிலை மாணவர்களுக்கான சத்து உணவு திட்டத்தை அமுல் படுத்தியது. இதனை பலர வரவேற்றனர். ஆனால் தமிழ் நாட்டில் வெளிவரும் பழம்பெரூம் பத்திரிகையான தினமலர் தமது தலைப்பில் “மாணவர்களுக்கு […]
உகாண்டாவில் 200 சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் அதிபர் யோவேரி முசெவெனி மனிதாபிமான அடிப்படையில் 200 சிறை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுவிக்க உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து நாட்டின் சிறை கைதிகள் நல அதிகாரி ஒருவர் கூறியதாவது, நாட்டில் உள்ள சிறைகளில் 72 ஆயிரத்திற்கும் அதிகமான சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் உடல் நலக்கோளாறு உடைய கைதிகள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் கைதிகளை தேர்ந்தெடுந்து மன்னிப்பு வழங்க அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு அதிபரும் ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன்படி 1800 […]
பிட்னஸ் பெண் 33 வயதில் திடீர் மரணம்
சமூக வலைத்தளங்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக வீடியோக்களை வெளியிடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதில் ஒரு சிலரின் வீடியோக்கள் வைரலாகும்போது, அவர்கள் பிரபலம் அடைகிறார்கள். அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, ஒவ்வொரு போஸ்டையும் பார்த்து தங்களது கருத்துகளை வெளியிடுவார்கள். ஆன்மிகம், மருத்துவம், அழகு குறிப்பு, பிட்னஸ் என எல்லா துறைகளிலும் இதுபோன்று வீடியோக்கள் வெளியிடுபவர்கள் சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் (Influencer) என அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் பிட்னஸ், […]
நாகூர் பட்டினச்சேரியில் மீனவர்கள் இடையே மோதல்!
நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் இடம்பெற்று வருகிறது. அத்துடன்நாகை – நாகூர் சாலையை மறித்து போராட்டம் நடைப்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கற்கள், கட்டைகளை கொண்டு ஒருவரையொருவர் தாக்கி கொகொண்டதால் பலர காயமடைந்துள்ளனர் பொலிஸார் மோதலை தடுக்கும் வகையில் கலககாரர்களை கைது செய்து வருகின்றனர் முழு விபரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதற்கும், ஏலம் விடுவதற்கும் மேல பட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி மீனவர்களுக்கு இடையே மோதல் போக்கு நிலவி […]
செப்டம்பர் 16 , அலைகடலென திரண்டு வாரீர்! தலைவரின் நோக்கத்தை நிறைவேற்ற ஒன்றிணைவோம் ! ஹரீஸ் MP
நூருல் ஹுதா உமர். தனது கொள்கைகளை விதையாக வீழ்த்தி முஸ்லிம் அரசியலில் புதிய முகவரி எழுதி தனது அரசியலில் தனித்தன்மையை உறுதிப்படுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணி பெருந்தலைவர் கலாநிதி எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் நினைவு தினமும் துஆ பிராத்தனையும் அடங்கிய தேசிய நிகழ்வு எதிர்வரும் 16ம் திகதி தலைவரின் தொகுதியான கல்முனை தொகுதியின் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், […]
BJP தமிழ்நாடு இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜெகன் வெட்டி கொலை! சந்தேகநபர் பிரபு தப்பியோட்டம்!
திருநெல்வேலி பா.ஜ., இளைஞரணி பொதுச்செயலாளர் ஜெகன் பாண்டியன் நேற்று இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மூளிகுளத்தை சேர்ந்தவர் ஜெகன் பாண்டியன் வயது 34. திருமணமாகவில்லை நேற்றிரவு மூளிக்குளம் பாலம் அருகே இவரை நோக்கி வந்த கும்பலொன்று சரமாரியாக வெட்டி கொன்றுள்ளனர். இதனால் அந்த பகுதியே பதற்றமடைந்ததுள்ளது.கோயில் கொடை தொடர்பான பகையே கொலைக்கு காரணம் என பொலிஸார் கூறுகிறார்கள். அண்ணமாலை அறிக்கை திருநெல்வேலி வடக்கு மாவட்ட பிஜேபி தமிழ்நாடு இளைஞரணி பொதுச் செயலாளர், சகோதரர் ஜெகன் பாண்டியன் அவர்கள், […]