இணைந்த கரங்கள் அமைப்பினால் வீரச்சோலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு !!
நூருல் ஹுதா உமர் கமு/சது/வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் (85) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை, பாதணி என்பன வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் அந்தோனி சுதர்சன் தலைமையில் இன்றைய தினம் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இணைந்த கரங்கள் அமைப்பு உறவுகளின் நிதி பங்களிப்பு மற்றும் மில்ரோகித் ராஜ்குமார் அவர்களின் நிதி பங்களிப்புடன் இம் மாணவகளுக்கான கற்றல் உபகரணங்கள், பாதணி மற்றும் புத்தகப்பைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் […]
ஞாபக மறதி நோய்க்கு எவ்வாறு தீர்வு…..?
ஞாபக மறதி நோயை கட்டுப்படுத்தக்கூடிய வழிமுறைகளை கனேடிய ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வயது மூப்புடன் ஏற்படக்கூடிய ஞாபக மறதி நோய்க்கு எவ்வாறு தீர்வு காணப்பட முடியும் என்பது குறித்து கனேடிய ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றைய மேற்கொண்டுள்ளனர். இதன்போது உடற்பயிற்சி மற்றும் மூளை பயிற்சி என்பனவற்றின் ஊடாக ஞாபக மறதி நோயை கட்டுப்படுத்த முடியும் அல்லது ஞாபக மறதி ஏற்படுவதனை தாமதப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது. ஒன்றாரியோவின் லண்டனில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வாளர் மொன்டிரோ ஒடாஸோ தலைமையிலான […]
தனது கணவரின் பாதுகாப்பு குறித்து கவலை- இம்ரான் கானின் மனைவி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தோஷகானா ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி, சிறையில் உள்ள தனது கணவரின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளார். அட்டாக் சிறையில் தனது கணவர் விஷம் வைத்து கொலை செய்யப்படலாம் என கூறி உள்ளார். இது குறித்து புஷ்ரா பீபி பஞ்சாப் மாகாண உள்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:- […]
‘நான் ஒரு பாவி’, ‘இந்த சிசுக்களின் இறப்புகளுக்கு நான்தான் காரணம்’ – செவிலியப் பெண்
வடமேற்கு இங்கிலாந்திலுள்ள கவுன்டஸ் செஸ்டா் மகப்பேற்று வைத்தியசாலையில் கடந்த 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் லூசி லெட்பி எனும் 33 வயதுடைய செவிலியப் பெண் பணியாற்றினார். இவர் கடமையிலிருந்த காலகட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேற்றுப் பிரிவில் சிசுக்கள் உயிரிழப்பது, திடீா் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்து வந்துள்ளன. வைத்தியசாலையில் சிசு மரணங்கள் திடீரென அதிகரித்தது தொடா்பாக பொலிஸாா் கடந்த 2017-ஆம் ஆண்டில் விசாரணையைத் தொடங்கினா். விசாரணையின் படி குறித்த பெண் செவிலியர் 07 சிசுக்களை […]
தைவான் சுதந்திரம் கோரும் பிரிவினைவாதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை -சீனா
தைவான் நாட்டை தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிராந்திய பகுதியாக சீனா கூறி வந்தபோதும், தனி சுதந்திர நாடாக தைவான் செயல்பட்டு வருகிறது. அந்நாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவுகரம் நீட்டியுள்ளன. எனினும், இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா தனது வான் மற்றும் கடல்வழி ரோந்து பணிகள் மற்றும் ராணுவ பயிற்சிகளை தொடங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை ஜின்குவா செய்தி நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இதனை, […]
கனடாவில் 4 மாதங்களாக தொடர்ச்சியாக வீடுகளின் விலை உயர்வு
கனடாவில் வீட்டு விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக Teranet-National Bank சுட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது ஜூலை மாதத்தில் வீடுகளின் விலைகள் 2.3 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. கடந்த 4 மாதங்களாக தொடர்ச்சியாக வீடுகளின் விலைகள் உயர்வடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் காரைத் திருட முயன்ற திருடர்கள் கைது
கனடாவில், தங்கள் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் கார்களில் ஒன்றைத் திருடமுயன்ற திருடர்களில் ஒருவரை துணிச்சலாக மடக்கினார் இளைஞர் ஒருவர். கனடாவின் Bramptonஇல் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் Gurbaj Sanghera (18), நேற்றிரவு வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது, ஏதோ உடையும் சத்தம் பலமாக கேட்டிருக்கிறது. நடந்தது என்னவென்றால், மூன்று பேர் Gurbaj வீட்டுக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கு தொங்கிக்கொண்டிருந்த கார் சாவியை எடுத்திருக்கிறார்கள். சத்தம் கேட்டு மாடியிலிருந்து இறங்கிய Gurbaj, வீட்டுக்குள் முகமூடி […]
வரட்சியினால் வடக்கு கிழக்கில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு.
இப்னு ஷெரீப்) நாட்டில் ஏற்பட்ட வரட்சியின் காரணமாக வடக்கு கிழக்கில் 42 ஆயிரத்து 519 குடும்பங்களைச் சேர்ந்த ஓர் இலட்சத்து 38 ஆயிரத்து 301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 18 ஆயிரத்து 951 குடும்பங்களைச் சேர்ந்த 63 ஆயிரத்து 136 பேர் கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய […]
யாழ் வீதிகளை புனரமைக்கும் அங்கஜன் MP
புத்தூர் – கந்தரோடை வீதியின் சுன்னாகம் சந்தி தொடக்கம் மாகியப்பிட்டி சந்தி வரையான பகுதியின் புனரமைப்பு பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமான கவனிப்பாரற்று காணப்பட்டிருந்த பெரும்பாலான வீதிகளின் புனரமைப்பு பணிகள், யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமா அங்கஜன் இராமநாதன் அவர்களது முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதி, யாழ்ப்பாணம் – பொன்னாலை – பருத்தித்துறை வீதி, புத்தூர் – சுன்னாகம் கந்தரோடை வீதி, மாவடி […]
வசூல் சாதனையாளன் “ஜெயிலரை” தடை செய்ய கோரி உயர்நீதி மன்றில் மனுதாக்கல்!
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கிற ஜெயிலர் திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் அதுபற்றிய பரபரப்பான விபரம் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகை தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் […]