இலங்கையின் இரண்டாவது பொருளாதார உச்சி மாநாடு கொழும்பில்

இலங்கையின் இரண்டாவது பொருளாதார உச்சி மாநாடு அடுத்த மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. குறித்த மாநாட்டின் போது பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அவசியம் மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள சாத்தியமான தாக்கம் பற்றியும் கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, மறுசீரமைப்பு மூலம் ஏற்படும் மாற்றம், மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அபிவிருத்தி செய்வதில் தொழிலாளர்களின் பங்கு என்பன அமர்வின் மையமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தொழிற்சாலை ஒன்றில் பாய்லர் வெடித்து 6 பேர் பலி

சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பாய்லர் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் பிராந்தியம் பிங்குவோ நகரில் அலுமினிய தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது. இங்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அலுமினிய கம்பிகளை வெளியேற்றும் சமயத்தில் உயர் வெப்பநிலை காரணமாக பாய்லர் வெடித்து சிதறியது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். இருப்பினும் இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 4 பேருக்கு […]

காசாவின் மருத்துவமனைகளிற்கு அருகில் வெடிப்புச்சத்தங்கள்

காசாவின் மருத்துவமனைகளிற்கு அருகில் வெடிப்புச்சத்தங்கள் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காசாவில் உள்ள பெரும் மருத்துவமனையான அல்ஷிபா அல்குட்ஸ் இந்தோனேசிய மருத்துவமனை போன்றவற்றிற்கு அருகில் வெடிப்புச்சத்தங்கள் கேட்பதாக பாலஸ்தீன ஊடகங்களை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்குட்ஸ் மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேலின் விமானதாக்குதல்கள் இடம்பெற்றதை காண்பிக்கும் வீடியோவொன்றை ஹமாஸ் டெலிகிராமில் வெளியிட்டுள்ளது. தரைமட்டமாகியுள்ள கட்டிடமொன்றையும் ஹமாஸ் வெளியிட்டுள்ளது.அந்த கட்டிடம் குவைத் மருத்துவமனைக்கு அருகில் உள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.  

ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் கடும் எச்சரிக்கை

லெபனானில் இருந்து இஸ்ரேலை தாக்கிவரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, இஸ்ரேலுடன் இருமுனை போரை தொடங்க ஹிஸ்புல்லா முயற்சிக்கிறது. இந்த முயற்சி லெபனானுக்கு நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பேரழிவை சந்திக்கும் வகையில் இஸ்ரேலின் பதிலடி இருக்கும். இந்த போர் இஸ்ரேலுக்கு வாழ்வா? சாவா? போன்றது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி நேரில் சந்தித்தார். […]