ஒருநாள் போட்டி

Share

Share

Share

Share

தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிம்பர்லியில் நேற்று பகல்-இரவாக நடந்தது.

முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 346 ரன் குவித்தது.

மலான் 114 பந்தில் 118 ரன்னும் (7 பவுண்டரி, 6 சிக்சர்), பட்லர் 127 பந்தில் 131 ரன்னும் 16 பவுண்டரி, 7 சிக்சர், மொய்ன் அலி 23 பந்தில் 41 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.

நிகிடி 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.

பின்னர் தென் ஆப்பிரிக்கா 43-ஓவர்களில் 287 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இதனால் 59 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

முதல் 2 போட்டியிலும் தோற்ற இங்கிலாந்து ஏற்கனவே தொடரை இழந்து இருந்தது.

இதனால் அந்த அணிக்கு இந்த வெற்றி ஆறுதல் அளிப்பதாக இருந்தது. ஹென்ரிச் கிளாசன் 62 பந்தில் 80 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) ஹென்ட்ரிக்ஸ் 52 ரன்னும் 6 பவுண்டரி) எடுத்தனர்.

ஜோப்ரா ஆர்ச்சர் அபாரமாக பந்து வீசி 68 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

ஆதில் ரஷூதுக்கு 3 விக்கெட் கிடைத்தது. 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

 

33,000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை
பாடசாலையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் சட்டமூலத்தை...
கனடாவின் மக்கள் தொகை?
திடீரென்று மாயமான பெண்மணி
நோயாளி சுய நினைவில் இருக்கும் போது...
ராகுலுக்கு உடனடியாக பிணை?
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
ராகுலுக்கு உடனடியாக பிணை?
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...