கனடாவில் லொட்டரியில் ஒரு மில்லியன் டொலர் வெல்வதாக கனவு கண்ட நபருக்கு உண்மையிலேயே கனவு நனவானது.

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், பிராம்ப்டனில் வசிக்கும் 34 வயதான லெமோர் மோரிசன் தனது இருபது வயதிலிருந்து லொட்டரி விளையாடி வருகிறார். லொட்டரியில் 1 மில்லியன் கனேடிய டொலர் வென்றதாக கனவு கண்ட பிறகு, அவர் ஒரு டிக்கெட்டையும் வாங்கலாம் என்று எண்ணினார்.

ஒரு நாள் இந்த டிக்கெட்டில் எனது அதிர்ஷ்டத்தை சோதிக்க முடிவு செய்து, அவர் உடனடி டயமண்ட் கிளப்பைத் தேர்வு செய்தார். அந்த டிக்கெட்டில் மோரிசனுக்கு விளையாட்டின் சிறந்த பரிசு விழுந்தது.

அவர் 250,000 கனேடிய டொலரை பம்பர் பரிசாக வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இது அவரது கனவில் கிடைத்த பரிசில் நான்கில் ஒரு பங்காக இருக்கலாம் ஆனால் மோரிசன் தான் திருப்தி அடைவதாக கூறுகிறார்.

இந்த வெற்றிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் $1 மில்லியன் வென்றேன் என்று கனவு கண்டேன், ஆனால் $250,000 வெற்றிக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், என்று அவர் ரொறண்ரோவில் உள்ள OLG பரிசு மையத்தில் தனது காசோலையை வாங்கும்போது கூறினார்.

இப்போது அவர் கால் மில்லியன் டாலர் பணக்காரராக இருப்பதால், அவர் தனது மனைவியுடன் விடுமுறைக்கு செல்வதாகவும், மீதமுள்ள பணத்தை முதலீடுகளுக்காக வைப்பதாகவும் மோரிசன் கூறியுள்ளார்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *