இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இன்னும் 1 மணித்தியாலத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இதற்காக இரு அணி தலைவர்களும் கிண்ணத்துடன் புகைப்படத்திற்கு தோன்றினர்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அவுஸ்திரேலிய அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நெதன் லீயோன் , எஸ்டன் ஏகர், மிட்செல் ஸ்வெப்சன், டாட் மர்பி ஆகியோர் உள்ளனர்.
வேகப்பந்து வீச்சில் மோரீஸ், ஸ்காட் போலண்ட் ஆகியோர் உள்ளனர்.
19 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் ஆர்வத்தில் அவுஸ்திரேலிய அணி உள்ளது.