பண்டாரவளை ஊவா – ஹைலண்ட்ஸ் Blue Mountion விளையாட்டு கழகம் நடத்தும் அணிக்கு எழுவர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் போட்டி விரைவில் நடைபெறவுள்ளது.

ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் பெருந்தோட்ட அணிகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இந்த கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதாக போட்டி ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 25 ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில் இந்த போட்டிகள் நடைபெறும் என போட்டி ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.

இதில் முதலாம் இடத்தை பெறும் அணிக்கு 40,000 ரூபா பரிசும் இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 20,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளன.

அதேபோல அணியின் முன்னாள் வீரர்களும் இதன் போது கௌரவிக்கப்படவுள்ளதாக போட்டி ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.

முக்கியமாக பெருந்தோட்ட அணிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த போட்டி நடைபெறவுள்ளதால் அனைத்து அணிகளும் வரவேற்கப்படுவதாக போட்டி ஏற்பாட்டு குழு மேலும் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *