விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மாகந்துறை விவசாய ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் சென்று அதன் ஆராய்ச்சியின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளார்.

குளியாபிட்டிய மாகந்துர விவசாய ஆராய்ச்சி நிறுவனம் 44 புதிய கலப்பின அந்தூரியம் இனங்களையும் இரண்டு அன்னாசி வகைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த 44 அந்தூரியம் இனங்களுக்கு மேலதிகமாக மேலும் இரண்டு அந்தூரியம் இனங்களுக்கு லங்கா பியூட்டி மற்றும் லங்கா குமாரி என பெயரிடப்பட்டுள்ளதாக மாகந்துர விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அன்னாசி வகைகளுக்கு இன்னும் பெயர்கள் முன்மொழியப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தூரியம் பூக்கள் பிரகாசமான வண்ணங்களைக் கொண்டிருப்பதும், பூக்களின் ஆயுள் நீடிப்பதும், ஒரு வாரத்திற்கு நிறம் மாறாமல் இருப்பதும், பூக்கள் வாடாமல் இருப்பதும் புதிய அந்தூரியத்தின் முக்கிய பண்புகள் என்று ஆராய்ச்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு புதிய அன்னாசி இரகங்களும் முள்ளில்லாதவை, இனிப்புச் சுவை கொண்டவை என்றும், இரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி வளரும் தன்மையினால், இந்த இரண்டு அன்னாசி வகைகளும் சர்வதேச சந்தைக்கு பயன்படுத்தப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *